07
Oct
நாடோடிகள்’, ‘ஈட்டி’, ‘மிருதன்’ போன்ற படங்களை தயாரித்த குளோபல் இன்போ டெய்ன்மெண்ட் நிறுவனம், தற்போது சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தயாரித்து வழங்கியது. இதன் அடுத்த படைப்பாக ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கீ’. இது இந்த நிறுவனத்தின் 10-வது படம். இதில் கதாநாயகனாக ஜீவா, நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்கள். இரண்டாம் நாயகியாக அனைகா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். இசை-விஷால் சந்திர சேகர், ஒளிப்பதிவு-அனிஷ் தருண் குமார், படத் தொகுப்பு-நாகூரான், தயாரிப்பு-எஸ்.மைக்கேல் ராயப்பன், செராபின் ராய் சேவியர், கலை-அசோக், நடனம்- ‘பாபா’ பாஸ்கர், எழுத்து, இயக்கம் -காலீஸ். செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கியது. கம்ப்யூட்டர் ஹேக்கிங்கை மையமாக வைத்து உருவாகிவரும் '#கீ' படம் குறித்து Actor…