பருத்தி வீரன் புகழ் கார்த்தி வெளியிட்ட ’கர்ஜனை’ மோஷன் போஸ்டர்!

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஜோன்ஸ் தயாரித்து, சுந்தர் பாலு இயக்கத்தில் த்ரிஷா நடித்து வெளிவர இருக்கும் படம் ‘கர்ஜனை’ காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். இதன் பின்னணியில் நடக்கும் கதை ஆக்‌ஷன் திரில்லராக படமாக்கப்பட்டுள்ளது.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் த்ரிஷா நடித்துள்ளார்.
இப்படத்தின் மோஷன் போஸ்டரை ‘பருத்தி வீரன்’ புகழ் கார்த்தி  நேற்று  மாலை 6 மணிக்கு வெளியிட்டார்.
இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
Motion Poster Link  :