ஜூன் 2ம் தேதி ரிலீஸாகும் ‘முன்னோடி’ படத்தில் என்ன ஸ்பெஷல்?

0
353

யாரை முன்னோடியாகக் கொண்டு பின்பற்றுகிறானோ அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள படம் ‘முன்னோடி’ எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். ‘கங்காரு’ படத்தின் நாயகன் அர்ஜுனா, இன்னொருவர் ‘குற்றம் கடிதல்’ படத்தில் குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த பாவல் நவநீதன் இருவரும் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் எஸ்.பி.டி.ஏ.குமார். தொழிலதிபரான இவர் சினிமா மீது கொண்ட காதலால் யாரிடமும் அசிஸ்டெண்டாக பணிபுரியாமல் இயக்குனர் ஆகியிருக்கிறார். இதற்கும் முன் ஷூட்டிங்கைக் கூட வேடிக்கைப் பார்த்தது இல்லையாம். படத்தின் டைட்டிலுக்கேற்ப இயக்குனர், தயாரிப்பாளர் இருவரும் தங்கள் முன்னோடிகளான தாத்தா, கொள்ளு தாத்தா பெயர்களையும் தங்கள் இனிஷியலில் சேர்த்திருக்கிறார்கள். அறிமுக இயக்குனராக இருந்தாலும் படத்தில் ஒரு பாடல் காட்சியை மட்டும் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளால் எடுத்து தன் திறமையைக் காட்டியிருக்கிறார் எஸ்பிடிஏ.குமார். இந்த பாடலை எடுக்க மட்டுமே ஆறு மாதங்கள் உழைத்திருக்கிறது படக்குழு. படத்திலும் ரசிகர்களை குஷிப்படுத்தும் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்திருக்கிறது.

இந்த முன்னோடி படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் தெலுங்கு தேசத்தை சேர்ந்த ஹரிஷ். இவர் பாகுபலி பிரபாஸின் உறவினர் ஆவார். நாயகியாக அதே தெலுங்கு தேசத்தை சேர்ந்த யாமினி பாஸ்கர் அறிமுகமாகிறார். இவர்கள் இருவருமே தெலுங்கில் நடித்துக்கொண்டிருப்பவர்கள். தமிழுக்கு புதிதாக அறிமுகமாகிறார்கள். படத்தில் வில்லன்களாக கங்காரு படத்தில் ஹீரோவாக நடித்த அர்ஜுனா, குற்றம் கடிதல் படத்தில் குணச்சித்திர நடிப்பால் நம் மனதைக் கவர்ந்த பாவல் நவநீதன் இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சித்தாரா, ஷிஜாய் வர்கீஸ், நிரஞ்சன், சுரேஷ், தமன், வினுக்ருதிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்ய, கே.பிரபு ஷங்கர் இசையமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது ” படத்தின் நாயகன் நல்லவனா கெட்டவனா? சூழலால் மாறியவனா? மாற்றப்பட்டவனா? என்பது மட்டுமல்ல நல்லவனை முன்னோடியாக எண்ணுகிற பாத்திரத்தின் நிலையையும் தீயவனை முன்னோடியாகக் கொண்ட பாத்திரத்தின் நிலையையும் காட்டி திரைக்கதை அமைத்துள்ளேன். இதனால் பர பர வென சுவாரஸ்யம் குறையாமல் படம் பறக்கும். இன்று நம் வாழ்க்கையில் உறவுகளின் மேன்மை தெரிவதில்லை. அப்படித் தெரியும் போது அவை இருப்பதில்லை. நம்மை விட்டுப் போய்விடுகின்றன. அவைகளை இந்தப் படம் பேசும்.

படத்திற்கு இசை பிரபுசங்கர். இவர் குறும்பட உலகில் பிரபலமானவர் மட்டுமல்ல, கலைஞர் டிவியின் நாளைய இயக்குரர்களில் டைட்டில் வென்ற இசையமைப்பாளர் .படத்தில் நான்கு பாடல்கள். தவிர இரண்டு சிறு பாடல்களும் உண்டு. ஒரு பாடல் முழுக்க முழுக்க கிராபிக்சில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மட்டும் ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. நீண்ட இடை வெளிக்குப் பிறகு சித்தாரா இதில் அம்மா வேடமேற்று நடித்துள்ளார். படம் முழுக்க வரும் நல்ல பாத்திரம் அவருக்கு.

வரும் ஜூன் 2ம் தேதி முன்னோடி’ படத்தை எஸ்கேப் ஆா்ட்டிஸ்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது..! ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அழகா்சாமியின் குதிரை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபா் சங்கம்’, ‘தேசிங்கு ராஜா’, ‘மான் கராத்தே’, ‘கயல்’, ‘மாப்பிள்ளை சிங்கம்’, ‘கொடி’ போன்ற தரமான வெற்றிப் படங்களைத் தயாரித்த எஸ்கேப் ஆா்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம், தற்போது ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, விக்ரமின் அடுத்த படம் என சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளரான மதன் தற்போது ‘முன்னோடி’ படத்தை வாங்கி வெளியிடுகிறார்.” என்று கூறினார்.