இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது ‘சர்வர் சுந்தரம்’. இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அனைவரையும் கவர்ந்து, பின்னர் வெளிவந்த டீசரும் டிரைலரும் பல மில்லியன் வியூஸ் பெற்று ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்பொழுது, ‘சர்வர் சுந்தரம்’ வரும் செப்டம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவது ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமைக்கும்போது நல்ல மனதோடு சமைக்க வேண்டும், திட்டிக் கொண்டோ, மனது நிம்மதியில்லாமலோ சமைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் சமையலில் தெரிந்துவிடும். இந்த விஷயங்களைப் போதனையாக இல்லாமல் கமர்ஷியலாக மக்களுக்குச் சொல்ல நான் சமைத்திருக்கும் படம்தான் ‘சர்வர் சுந்தரம்’மாம். இப்படத்தில் ‘சர்வர்’ கதாபாத்திரத்திற்காக கதாநாயகன் சந்தானம் பிரத்யேக பயிற்சி மேற்கொண்ண்டாரம். இடை விடா சிரிப்பு வெள்ளமாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புது முக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கியுள்ள இந்த படம் பற்ரி அவரிடம் கேட்ட போது, “சாப்பாடு, புவ்வா, ஃபுட் என்று சொல்லப்படும் உணவு என்பது ஒருவருடைய வாழ்க்கையில் முக்கியமான அங்கம். அதைப் பற்றி நமது அன்றாட வாழ்க்கையில் நாம் பெரிதாக யோசிப்பதில்லை. உணவின் மகத்துவம் பலருக் குத் தெரியவில்லையே என்ற மிகப் பெரிய ஆதங்கம் எனக்கு இருந்தது. அதையொட்டி யோசித்து உருவாக்கிய‘சர்வர் சுந்தரம்’ முழுக்க உணவைப் பற்றிய முதல் படமாக இருக்கும். உணவை அடிப்படையாக வைத்து சில படங்கள் வந்திருந்தாலும் அவற்றிலெல்லாம் உணவைப் பின்னணியாகக் கொண்டு காதலைச் சொல்லி யிருப்பார்கள். ஆனால், இந்த ‘சர்வர் சுந்தரம்’ முழுக்க உணவைப் பற்றி மட்டுமே. காதல், நட்பு, துரோகம் அனைத்துமே உணவின் பின்புலத்தில் இருக்கும். சமையல் நிபுணர் வெங்கடேஷ் பட் இந்தப் படத்துக்கு ஆலோசகராகப் பணி புரிந்துள்ளார். இப்படத்துக்காக சுமார் 15 சமையல் நிபுணர்கள் ஒன்றிணைந்து பணி புரிந்துள்ளார்கள்” என்றவர்.
உணவை வைத்துப் படப்பிடிப்பு நடத்தியது படு கஷ்டமான விஷயம். உணவை வைத்துப் படப்பிடிப்பு செய்யும் போதெல்லாம் மினிமம் 10 சமையல் நிபுணர்கள் தளத்தில் இருப்பார்கள். படப்பிடிப்பு தளத்திலேயே சமைத்து அப்படியே படப்பிடிப்பு செய்வோம். கோவாவில் படப்பிடிப்பு நடக்கும்போது சரியான மழை. அப்போது டெண்ட் போட்டு உள்ளே சமைப்போம். மழை நின்றவுடன் சமைத்ததை வெளியே எடுத்து வந்து படப்பிடிப்பை நடத்துவோம். இப்படி நிறைய சவால்களைச் சந்தித்துள்ளோம். 15 நிமிடங்களில் உணவுப் பொருட்களின் படப்பிடிப்பை முடிக்காவிட்டால், அதன் நிறம் மற்றும் வழங்கல் முறை உள்ளிட்டவை மாறி விடும். ஆக, ப்படத்தில் உணவும் ஒரு முக்கியமான நடிகர் எனச் சொல்லலாம்.” என்றும் குறிப்பிட்டார்’
கெனன்யா பிலிம்ஸ்’ தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். நடிகர் ராதா ரவி இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஆக, வரும் செப் 29ம் தேதி ரசிகர்களுக்கு ஒரு சிரிப்பு படையலாக ‘சர்வர் சுந்தரம்’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.