கலை சினிமாஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பு “Superstar – மீத்திரன் முக்கிளை”

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “தாதா 87”. இந்த படம் முழுக்க முழுக்க சாருஹாசன் மற்றும் கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜாவை மையமாக வைத்து, வித்தியாசமான திரைக்கதை யோடு உருவாகியுள்ளது. இந்த படத்தை கலை சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித் துள்ளது. இந்நிலையில், “தாதா 87” படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படமும் வெளியாகவுள்ளது.

தற்போது கலை சினிமாஸ் நிறுவனம் தன்னுடைய அடுத்த படத்திற்க்கு ‘Superstar – மீத்திரன் முக்கிளை’ என்ற தலைப்பை பதிவு செய்துள்ளது. நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

error: Content is protected !!