போங்கு வெற்றிப் படத்தை தொடர்ந்து ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “ இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
இசை – அம்ரிஷ்
பாடல்கள் – கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ
எடிட்டிங் – பிரசன்னா.ஜி.கே
கலை – ராஜா மோகன்
ஸ்டன்ட் – விக்கி
தயாரிப்பு – ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நஞ்சுண்டான்
இந்த படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…
இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்.
ஒவ்வோர் ரசிகனும் சீட் நுனியில் அமர்ந்து தான் பார்க்கத் தோணும். வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர்களில் பிரகாசமானவர் கதிர்.
அவரது உடல் வாகுக்கு ஏற்ற மாதிரி பொருத்தமான கதாபாத்திரம் இதில் இருக்கு.
கதிர் என்கிற மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடம் அவருக்கு. முதல் முறையாக போலீஸ் வேடம் ஏற்கிற நடிகர்களுக்கு அந்த படம் நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தி தரும் என்பது சினிமா பார்முலா..அந்த பிரகாசம் கதிருக்கும் உண்டு.
தவறு செய்கிறவர்களுக்கு சட்டம் தராத தண்டனையை ஒரு தனி மனிதன் தருகிற கதை தான் சத்ரு. அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே. பொருந்தி போகிறார்.
படத்திற்கு தேவையான செலவு செய்த தயாரிப்பாளர்கள் ரொம்பவும் பாராட்டுக்குரியவர்கள். கூடிய விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது என்றார் இயக்குனர் நவீன் நஞ்சுண்டான் .
அத்துடன் இன்னொரு விஷயமும் இதில் இருக்கு. ராட்டினம் உட்பட சில படங்களில் கதானாயகனாக நடித்திருந்த லகுபரன் இந்த படத்தில் வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே நடை பெற்றுள்ளது.