விஷால் எப்படி கணியன் பூங்குன்றனாகவே மாறினார்? – துப்பறிவாளன் பின்னணி ரிப்போர்ட்!

விஷால் எப்படி கணியன் பூங்குன்றனாகவே மாறினார்? – துப்பறிவாளன் பின்னணி ரிப்போர்ட்!

சினிமா ஒரு கருணையற்ற போர்க்களம். இங்கே எந்தவித சலுகையையும் எதிர்பார்க்க கூடாது. படைப்பின் இறுதி வடிவம் பார்வையாளரை திருப்திபடுத்தியதா இல்லையா என்பது மட்டும்தான் கவனிக்கப்படும். அதன் பின்னால் இருந்த உழைப்பும் சிரமங்களும் அதன் பின்னர் தான் அங்கீகரிக்கப்படும். இதோ நாளை ரிலீஸாகப் போகும் துப்பறிவாளன் தொடங்கிய பின்னர் தான் விஷாலுக்கு நிறைய பொறுப்புகள் வந்தன. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நின்று வெற்றி பெற்று தலைவராகவும் ஆனார். தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராகி ரஜினி கால்ஷீட், விஜய் கால்ஷீட் வாங்கி கல்லா நிரப்பியவர்கள் மத்தியில் சொந்தப்படத்திற்கு நேரம் கொடுக்க முடியாத அளவுக்கு பொறுப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தினார். இன்னும் சில மணி நேரங்களில் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்ற சூழலில் அன்று காலை தான் ஏதாவது முக்கிய பிரச்னைக்கு பேச அழைப்பார்கள். ‘ஷூட்டிங்கை கேன்சல் பண்ணுங்க...’ என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு சென்றுவிடுவார்.இது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. சுமார் 20 நாட்கள் நடந்தன.…
Read More
தமிழ் சினிமாவில் ஜேம்ஸ்பாண்ட் டைப்பிலான படம் – துப்பறிவாளன்

தமிழ் சினிமாவில் ஜேம்ஸ்பாண்ட் டைப்பிலான படம் – துப்பறிவாளன்

தமிழக அரசியல் போலத் தான் தமிழ் சினிமாவும். எப்போது யார் யார் கூட்டு சேர்வார்கள் என்பதை கணிக்க முடியாது. அப்படி ஒரு கணிக்க முடியாத கூட்டணி தான் விஷாலும் மிஷ்கினும் இணைந்திருக்கும் துப்பறிவாளன் படம். விஷாலும் மிஷ்கினும் முகமூடி படத்திலேயே இணைந்திருக்க வேண்டியவர்களாம். முகமூடி கதை முதலில் விஷாலுக்கு தான் வந்திருக்கிறது. அப்போது விஷால் சில கமிட்மெண்ட்களில் இருந்ததால் இணைய முடியாமல் போயிருக்கிறது. ஆனால் இருவருக்குள்ளான நட்பு அப்படியே இருந்திருக்கிறது. இது குறித்து விஷால் என்ன சொல்கிறார்? ‘இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம்’னு எட்டு வருஷங்களுக்கு முன்னாடிப் பேச ஆரம்பிச்சோம். இந்த எட்டு வருஷங்கள்ல நாங்க சேர்ந்து படம் பண்ண, மூணு முறை வாய்ப்பு வந்துச்சு. ஆனால், ஒவ்வொரு முறையும் அவரோட வாய்க் கொழுப்புனால அது மிஸ் ஆகிட்டே இருந்துச்சு. அவர் என் முக்கியமான நண்பர். அதனால என்கிட்ட எப்படிப் பேசினாலும் பிரச்னை இல்லை. ஆனால், தயாரிப்பாளர்னு வரும்போது, ‘நான் இப்படித்தான்…
Read More
விஷால் நடிக்கும் துப்பறிவாளன் கதை என்ன? – மிஷ்கின் மினி பேட்டி!

விஷால் நடிக்கும் துப்பறிவாளன் கதை என்ன? – மிஷ்கின் மினி பேட்டி!

நடிகர் சங்க செயலாளரு, தயாரிப்பளர் சங்கத் தலைவருமான விஷால் கைவசம் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’, பி.எஸ்.மித்ரனின் ‘இரும்பு திரை’, லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2’, வெங்கடே ஷின் ‘நாளை நமதே’, பேரரசு படம், மலையாளத்தில் உன்னிகிருஷ்ணனின் ‘வில்லன்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரெடியாகிக் கொண்டிருக்கிறது. .இதில் ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷால் கணியன் பூங்குன்றன் என்ற டிடெக்டிவ்வாக வலம் வரவுள்ளாராம். மேலும், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், சிம்ரன், இயக்குநர் கே.பாக்யராஜ் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் ஆங்கிலத்தில் வந்த ‘செர்லாக் ஹோம்ஸ்’, தமிழில் வெளியான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற நாவல்களின் ஸ்டைலில் இருக்குமாம். அரோல் கொரேலி இசையமைத்து வரும் இதற்கு கார்த்திக் வெங்கட்ரா மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ எஸ்.நந்தகோபாலுடன் இணைந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். சமீபத்தில் படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்…
Read More