விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ – ஷூட்டிங் ஸ்பாட் அப்டேட்!

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘மெர்சல்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், சத்யராஜ், வடிவேலு, யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப் படத்துக்கு இன்னும் சுமார் 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஒரே ஒரு பாடல் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டியதுள்ளது. இதனால் ஜூலை 31-ம் தேதி நடத்த படப்பிடிப்பின் போது, படக்குழுவினர் அனைவருக்கும் தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார் விஜய்.

விரைவில் இறுதிக்கட்டக் படப்பிடிப்பையும், பாடல் படப்பிடிப்பையும் தொடங்க திட்டமிட்டு வருகிறது படக்குழு. அனைத்துப் பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்துவிட்டார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பாக, படத்தின் எடிட்டிங் பணிகளை முடித்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் பின்னணி இசைக்கு அளிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். அண்மையில் பிரமாண்ட வெற்றிகண்ட ‘பாகுபலி’ படத்துக்கு திரைக்கதை எழுதியவர் இவர்தான். தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘மெர்சல்’ படத்துக்கு திரைக்கதை எழுதியவரும் இவர்தான். இப்பட அனுபவம் குறித்து “இதற்கு முன் அட்லீ இயக்கிய இரண்டு படங்களுமே எனக்குப் பிடிக்கும். அதேமாதிரி அசத்தலான கான்செப்ட்டோடுதான் என்னைப் பார்க்க வந்தார். அது பிடித்துப் போய் திரைக்கதை எழுதினேன். இந்தப் படத்தில், நிறைய எமோஷனல் காட்சிகள் இருக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போது, ரசிகர்கள் காட்சியோடு ஒன்றிணைந்து கைதட்டுவர்” எனத் தெரிவித்துள்ளார்’

விஜயேந்திர பிரசாத்.விஜய் மூன்று வேடங்களில் நடித்துவரும் இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா, இம்மாதம் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.