பெங்களூருவில் மெர்சல் படத்துக்கு எதிராக வன்முறை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பெங்களூருவில் மெர்சல் படத்துக்கு எதிராக வன்முறை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பெங்களூருவில் மெர்சல் படம் திரையிடப்பட்ட ஒரு திரையரங்கில் நடிகர் விஜய் ரசிகர்கள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர், இது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெங்களூர் திரையரங்கில் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள திரையரங்குகளில் மெர்சல் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டு, சில மணி நேர இடைவெளிக்குப் பிறகு காவல்துறை பாதுகாப்புடன் மீண்டும் திரையிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மைசூர் நகரிலும் மெர்சல் திரைப்படத்தை திரையிடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இரு நகரங்களிலும் பதற்றம் நிலவுவதால், அங்கு வாழும் தமிழர்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். தமிழர் எதிர்ப்பையே பிரதானமாகக் கொண்டிருக்கும் கன்னடர்கள் தமிழ் திரைப்படங்களை திரையிட விடாமல் முடக்குவது முறையல்ல. பாகுபலி&2 திரைப்படம் வெளியான போது நடிகர் சத்யராஜ் எப்போதோ தெரிவித்த நியாயமானக் கருத்துக்களைக் கூறி அப்படத்தை முடக்கத் துடித்தனர். இத்தகைய போக்கையும், தமிழ் திரைப்பட எதிர்ப்பையும்…
Read More
விஜய் அட்டகாசமான மேஜிக் மேன்! -மேஜிசியன் சர்டிபிகேட்

விஜய் அட்டகாசமான மேஜிக் மேன்! -மேஜிசியன் சர்டிபிகேட்

அட்லி டைரக்‌ஷனில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில், அப்பா - இரண்டு மகன்கள் என மொத்தம் 3 வேடங்களில் நடித்துள்ளார் விஜய். தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் எகிறிக் கொண்டே வருகிறது. இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் விஜய் மேஜிக் மேனாகவும் வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படத்தில் பல கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். விஜய்யின் மேஜிக் மேன் ரோலுக்காக மூன்று பேர் பிரத்யேகமாக பணியாற்றியுள்ளார்கள். அதில் மாசிடோனியாவைச் சேர்ந்த மேஜிக் நிபுணர் கோகோ ரெக்கியூம் (Gogo Requiem) என்பவர் மேஜிக் விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளார். தற்போது அந்த மேஜிசியன் . விஜய்யை புகழ்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “மெர்சல் படம் மூலம் ஜோசஃப் விஜய்யுடன் பணியாற்றும் நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்போதைக்கு படத்தைப் பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது. இன்னும் சில மாதங்களில் படத்தை மொத்தமாகப் பார்ப்பீர்கள்.…
Read More
விஜய் நடித்து வரும்  ‘மெர்சல்’ – ஷூட்டிங் ஸ்பாட் அப்டேட்!

விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ – ஷூட்டிங் ஸ்பாட் அப்டேட்!

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தில் எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், சத்யராஜ், வடிவேலு, யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப் படத்துக்கு இன்னும் சுமார் 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஒரே ஒரு பாடல் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டியதுள்ளது. இதனால் ஜூலை 31-ம் தேதி நடத்த படப்பிடிப்பின் போது, படக்குழுவினர் அனைவருக்கும் தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார் விஜய். விரைவில் இறுதிக்கட்டக் படப்பிடிப்பையும், பாடல் படப்பிடிப்பையும் தொடங்க திட்டமிட்டு வருகிறது படக்குழு. அனைத்துப் பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்துவிட்டார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பாக, படத்தின் எடிட்டிங் பணிகளை முடித்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் பின்னணி இசைக்கு அளிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனிடையே இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். அண்மையில் பிரமாண்ட வெற்றிகண்ட ‘பாகுபலி’ படத்துக்கு திரைக்கதை எழுதியவர் இவர்தான். தற்போது அட்லீ…
Read More