28
Jul
சினிமா ஒரு மாய உலகம். யார் எப்போது சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. யார் என்றே தெரியாத ஒருவரை நூற்றாண்டின் நடிகராக மாற்றும் சக்தி சினிமாவுக்கு உண்டு. அத்தனை திறமைகளை கொண்டிருந்தாலும், சில படங்களிலேயே ஒரு கலைஞனை ஒதுக்கி வைக்கவும் இந்த சினிமா தயங்காது. இந்த புரிதல் இல்லாமல் எத்தனையோ பேர் இந்த மாய உலகில் நுழைந்து, காணாமல் போய் உள்ளனர். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வெறியோடு சுற்றும் ஒருவனை கடைசிவரை கண்டுகொள்ளாது. அதுவே சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஒருவனை தனக்குள்ளே இழுத்து, நீச்சல் அடிக்க வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொடுத்து, இந்த சினிமா கடலில் மாபெரும் மரியானாவாக மாற்றும். அப்படி மாறிய ஒருவர் தான் நடிகர் தனுஷ். மழித்த மீசை; பென்சில் தேகம்; அப்பாவி முகம்; விடலைப்பருவம்... இப்படியான உருவத்தோற்றம் கொண்ட ஒருவரை 19 வருடங்கள் கழித்து உலக சினிமாவே கொண்டாடப் போகிறது என்று…
