விரைவில் வெளியாகவிருக்கும் விறுவிறுப்பான படம் “தடம்”

0
298

அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘குற்றம் 23’ திரைப்படத்தை தயாரித்த ரெதான் – தி சினிமா பீப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பாளர் இந்தர் குமார், தற்போது ‘தடம்’ என்ற புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கிறார். மேலும், தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – மகிழ் திருமேனி, தயாரிப்பு நிறுவனம் – ரெதன்-தி சினிமா பீப்பிள், தயாரிப்பாளர் – இந்தர்குமார், ஒளிப்பதிவு – கோபிநாத், படத் தொகுப்பு – காந்த், கலை இயக்கம் – அமரன், இசை – அருண்ராஜ், பாடல்கள் – மதன் கார்க்கி, ஏக்நாத், சண்டை இயக்கம் – ஸ்டன் சில்வா, அன்பறிவ், நடன இயக்கம் – தினேஷ், தயாரிப்பு நிர்வாகம் – ஆர்.பி.பாலகோபி, ஈ.இளங்கோவன், ஒலி – டி.உதயகுமார், ஒலி வடிவமைப்பு – சுரன், அழகியகூத்தன், உடை வடிவமைப்பு – பிரதிஷ்டா, புகைப்படங்கள் – அஜய் ரமேஷ், கிராபிக்ஸ் – பிரசாத், விளம்பர வடிவமைப்பு – சசிதரன், உடைகள் – பி.ஆர்.கணேசன், ஒப்பனை – ராமச்சந்திரன், மக்கள் தொடர்பு – நிகில்.

சமீபத்தில் இப்படம் தணிக்கை குழுவினருக்கு காண்பிக்கப்பட்டு யு/ஏ (U/A) சான்றிதழ் பெறப்பட்டது. படத்தை தணிக்கை குழுவினர் வெகுவாக பாராட்டியுள்ளார்கள்.

இப்படத்தின் இசை மற்றும் பட வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.