பாக்கணும் போல இருக்கு – படா காமெடி படம்!

சுமார் 500 படங்களுக்கு மேல் ஃபைனான்சியராக, விநியோகஸ்தராக புகழ்பெற்ற நிறுவனம் விஸ்வநாதனின் பரதன் பிலிம்ஸ். இந்த நிறுவனத்திலிருந்து பரதன் என்பவா் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் பாக்கணும் போல இருக்கு.விஜய் நடித்த சுறா, பொன்மனம், என் புருஷன் குழந்தை மாதிரி படங்களை இயக்கிய S.P.ராஜ்குமார் இயக்குகி இருக்கிறார். பரதன் கதாநாயகனாக அறிமுகமாக, கதாநாயகியாக திரிஷ்யம் ஹன்சிபா நடிக்க சூரி, கஞ்சாகருப்பு, லிவிங்ஸ்டன், ஜெயபிரகாஷ் மற்றும் பலா் நடிக்கும்தான் படம் பாக்கணும் போல இருக்கு.

தொடர் நகைச்சுவைத் தோரணங்களுடன் சின்ன பட்ஜெட்டில் கிராமத்து பின்னணியில் காதலிக்கும் வயது எது..? கல்யாண வயது எது..? எப்போது காதலிக்க வேண்டும்..? எப்போது திருமணம் செய்ய வேண்டும் என்பதை சொல்லும்விதமாக படமெடுத்திருக்கிறார் கள். அதிலும் சூரி, கஞ்சா கருப்புவின் நகைச்சுவையில் படத்தில் ஒரு சிறிய பகுதிகூட போரடிக்கவில்லை..! நாளை- வெள்ளிக்கிழமை படம் வெளியாகிறது. காமெடிக்கும், கதைக்கும் கியாரண்டியுடன் வந்திருக்கிறது.

இதில் வரும் இரட்டை ஜடை கூப்பிடுதே முத்தம்மா என்ற பாடல் ரசிகா்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூப்பில் 25 லட்சம் போ் பார்த்து பாராட்டியுள்ளார்கள். திருவிழா, டீக்கடை, சலுான் கடை என பட்டிதொட்டியெங்கும் இந்த பாடல் பரபரப்பாக பேசப்படுகிறது.இந்த பாடல் காட்சியில் நிஜமான ஜல்லிக்கட்டு காட்சிகளை தத்ருபமாக படமாக்கியுள்ளார்கள்.
சிலம்பம், கராத்தே, குதிரையேற்றம் இப்படி பல பயிற்சிகள் பெற்றிருக்கும் பரதன், பாக்கணும் போல இருக்கு படத்திற்கு ரசிகா்களிடம் பொிய வரவேற்பை பெறுவார் என்று பலரும் பாராட்டிய வண்ணம் உள்ளனா். அடுத்து இரண்டு படங்கள் பண்ண கதைகள் கேட்டிருக்கிறாராக்கும்.