நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்த கால கட்டத்தில் வணிக ரீதியான சக்சஸ் புல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப் பட்டவர் மணி வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது.
மணிவாசகத்தின் மகனான காந்திமணிவாசகம் தயாரித்து, இயக்கும் “ களவாணி மாப்பிள்ளை “ படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த்
ஒளிப்பதிவு – சரவண்ணன் அபிமன்யு
இசை – என்.ஆர்.ரகுநந்தன்
கலை – மாயா பாண்டி
எடிட்டிங் – பி.கே
நடனம் – தினேஷ்
ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்
தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்
நிர்வாக தயாரிப்பு – ஸ்டில்ஸ் ராபர்ட்
இணை தயாரிப்பு – திருமூர்த்தி
தயாரிப்பு – ராஜேஸ்வரி மணிவாசகம்.
கதை, திரைக்கதை, இயக்கம் – காந்தி மணிவாசகம்.
படப்பிடிப்பு 15 ம் தேதி பொள்ளாச்சியில் துவங்க உள்ளது. ஜனரஞ்சகமான காமெடி, காதல் கதையாக உருவாக உள்ளது.