உலக சினிமா வரலாற்றில் நீளமான படம் – ‘ஆம்பியன்ஸ்’!

ஸ்வீடனைச் சேர்ந்த ஆண்ட்ரூ வெப்பர்க் என்பவர் சோதனை முயற்சியாக 720 மணி நேரம் ஓடக்கூடிய ஆம்பியன்ஸ் என்னும் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப்படம் 30 நாட்கள் ஓடக்கூடிய அளவிற்கு எடிட் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்து ஆண்ட்ரூ வெப்பர்க் கூறும்போது இந்தப்படம் எனது கடைசி படம் எனவும் இனி படங்களை இயக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். 72 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தின் டீசர் 2014ம் ஆண்டு ரிலீசானது. அடுத்து 72 மணி நேரம் ஓடக்கூடிய ட்ரெய்லர் 2018ம் ஆண்டு ரிலீசாக இருக்கிறது. ஆக, நீண்ட நேரம் ஓடக்கூடிய டீசர், ட்ரெய்லர் என்கிற சாதனையையும் இப்படம் படைத்துள்ளது. ஆண்ட்ரூ வெப்பரின் வாழ்நாள் கனவான ஆம்பியன்ஸ் படம் 2020ஆம் ஆண்டு ரிலீசாக இருக்கிறது. ஏற்கனவே இதே போன்று 240 மணிநேரம், அதாவது பத்து நாட்கள் ஓடக்கூடிய மாடர்ன் டைம்ஸ் ஃபாரெவர் என்ற படம் வெளியாகி இருந்தது. அந்தப் படத்தின் சாதனையை ஆம்பியன்ஸ் படம் முறியடிக்க இருக்கிறது.

ஹூம்.. நம்மூரில் 2 மணி நேரத்தை தாண்டினாலே சலிப்பு ஏற்பட்டு திரையரங்கிலிருந்து வெளியேறும் ரசிகர்கள் உள்ள காலத்தில் சுமார் 30 நாட்கள் (730 மணி நேரம்) ஓடக்கூடிய இப்படத்தை ஸ்வீடனைச் சேர்ந்த ஆண்ட்ரூ வெப்பர்க் உருவாக்கி அதையும் ரிலீஸ் செய்ய தயாராகி வருவது பிரமிப்பான விஷயமாக பேசப்படுகிறது..

முன்னதாக 72 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தின் டீசர் 2014-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த டீசர் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களால் காணப்பட்டு சினிமா ரசிகர்கள் பலரை எதிர்பார்ப்புக்குள்ளாகியது.

இந்த நிலையில் இப்படத்தின் பெரும்பாலான கட்சிகள் படமாக்கப்பட்டு எடிட்டிங் பணியும் சமீபத்தில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் 72 மணி நேரம் ஓடக்கூடிய ட்ரெய்லர் 2018 ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை சுருக்கம் குறித்து இயக்குனர் ஆண்ட்ரூ கூறும்போது, “விண்வெளி, காலம் இவற்றுக்கு இடையே பிணைக்கப்பட்ட ஒரு கனவு பயணம்தான் இப்படம்” என்று தெரிவித்தார். ஆண்ட்ரூ வெப்பர்க்கின் கனவு படமாக உருவாகியுள்ள ஆம்பியன்ச் திரைப்படம் 2020-ஆம் ஆண்டு திரையரங்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.