புரூஸ் லீ’ படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக சண்முகம் முத்துசாமியின் ‘அடங்காதே’, வெங்கட் பக்கரின் ‘4ஜி’, வள்ளிகாந்தின் ‘செம’, பாபா பாஸ்கரின் ‘குப்பத்து ராஜா’,பாலாவின் ‘நாச்சியார்’, ரவி அரசுவின் ‘ஐங்கரன்’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர கைவசம் ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாள மயம்’, எழிலின் ‘எக்கடிக்கி போதவு சின்னவாட’ ரீமேக், வெற்றிமாறன் படம், சந்திரமௌலியின் ‘100% காதல்’ ரீமேக், சீமானின் ‘கோபம்’ ஆகியவை உள்ளது. இவற்றில் ‘நாச்ச்சியா’ நீண்ட இடைவெளிக்குப்பின் பாலா இயக்கி வரும் படம் ‘ இந்தப் படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இத்தகவலை ஜி.வி. பிரகாஷ் ட் விட்டரில் தெரிவித்துள்ளார்.இந்தப் படத்தை பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த ‘நாச்சியார்’ படத்தில் ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிர காஷ் குமார் திருடனாக நடித்து வருகிறார். ஜோதிகா போலீஸ் ஆபீசராக வரவுள்ளாராம். தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசைய மைத்து வரும் இதற்கு ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார், சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘EON ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் பாலா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘B ஸ்டுடியோஸ்’ மூலம் தயாரித்து வருகிறார்.
சமீபத்தில், நடிகர் சூர்யா ட்விட்டிய இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாக ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீசர், டிரையிலர் & ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்விட்டப்படும் என எதிர்பார்க்கப்ப டுகிறது. படத்தை செப்டெம்பர் 28-ஆம் தேதி ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளது ‘நாச்சியார்’ டீம்.
இதனிடையே பாலா இயக்கத்தில் நடித்தது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஜிவி.பிரகாஷ், பாலா சார் இயக்கத்தில் நாச்சியார் படத்தில் நடித்தது சிறந்த அனுபவத்தை கொடுத்துள்ளது. ஓவ்வொரு ஷாட்டிலும் என் மீது பாரத்தை ஏற்றி வைத்து பிழிந்தெடுத்து விட்டார். அவர் எதிர்பார்க்கும் வகையில் காட்சிகள் அமையும் வரை விடமாட்டார். அவருடைய இயக்கத்தில் நடித்தது பெரிய பணியாகி விட்டது. ஆனாலும், அவரிடம் இருந்து நடிப்புக்கு தேவையான அனுபவங்களை கற்றுக்கொண்டேன். இது எனது கேரியரில் மிகச்சிறந்த வாய்ப்பு. அதற்காக பாலா சாருக்கு மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.