நடிகரும் பத்திரிகையாளருமான ‘கயல்’ தேவராஜ் தனது 50 வது பிறந்த நாளையொட்டி உடல் தானம் செய்துள்ளார். அவருக்கு நடிகர் கமல்ஹாஸன் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் முதல் முறையாக உடல் தானம் செய்தவர் நடிகர் கமல்ஹாசன். தன்னைப் போலவே கண் தானம் மற்றும் உடல் தானம் செய்பவர்களை வாழ்த்தியும், ஊக்குவித்தும் வருகிறார்.
நடிகரும் மூத்த பத்திரிகையாளருமான ‘கயல்’ தேவராஜ் தனது 50 வது பிறந்தநாளை முன்னிட்டு உடல் தானம் செய்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் அமீர் நடிப்பில் வெளியான ‘யோகி’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 18) தனது 50 வது பிறந்தநாள் கொண்டாடும் தேவராஜ், தனது உடல் மற்றும் கண்களை தானம் செய்துள்ளார்.
Related posts:
அரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “ கள்ளபார்ட் “ - பூஜை போட்டாச்சு!September 19, 2018
TAROT படம் எப்படி இருக்கிறது ?May 2, 2024
சூர்யாவுடன் இணைந்து நடிக்கத் தயார்! - ஜோதிகாSeptember 22, 2017
சீதக்காதி - விஜய் சேதுபதி பட டைட்டிலுக்கு எதிர்ப்பு?January 22, 2018
நடிகர் ஜீவாவின் 'டெஃப் ஃப்ராக்ஸ்' மியூசிக் லேபிள் !!February 1, 2024