‘கட்டப்பா’ சத்யராஜ் மகள் மிரட்டல்!- போலீஸில் புகார்?

நடிகர் சத்யராஜ்  ஒரே மகள் திவ்யா நியூட்டிஷி யனிஸ்ட் (உணவு ஆலோசக மருத்துவர்) ஆக உள்ளார். இவரும் ‘A Bit To Be Fit’ என்ற டைட்டிலில் உருவான ஆவணப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த ஆவணப்படம் விளையாட்டு மற்றும் ஊட்ட ச்சத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சமீபத்தில் இவரது கிளினிக்கிற்கு வந்த வெளிநாட்டினர் 2 பேர் மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது. இது பற்றி திவ்யா கூறியதாவது:

மூணு நாளைக்கு முன்னாடி இரண்டு ஆம்பளையும் ஒரு பெண்மணியும் வந்தாங்க. அவர்களில் இருவர் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்கள், மற்றொருவர் இந்தியாவை சேர்ந்தவர். என் ஆலோசனை மையத்திற்கு வருகைத் தந்த மூவரும், தாங்கள் ஒரு மருந்து நிறுவனத்திலிருந்து வருவதாக சொன்னாங்க. உடனே அவர்களிடம் குறிக்கிட்டு ’நான் வைட்டமின், சத்து பானம், ஊடச்சத்துகான பண்டங்கள் ஆகியவற்றை மட்டுமே பரிந்துரைப்பதாக தெரிவித்தேன்.

அதைப் பொருட்படுத்தாத அந்த அமெரிக்க மருந்து நிறுவன பிரதிநிதிர்கள், தாங்கள் கொண்டு வந்துள்ளது மல்டி வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கொழுப்பை குறைக்க கூடிய மருந்துகள் என தெரிவித்து சாம்பிளை நீட்டினார்கள். அந்த மருந்துகளை வாங்கி அதில் குறிப்பிட்டுள்ள பட்டியலில் உள்ள பொருட்களின் விவரங்களை படித்து தான் அப்படியே நடுங்கி போயிட்டேன். ஏன்னா அந்த மருந்துகளில் சேர்கப்படுள்ள பொருட்களில் “ஹைபர் விட்டமினோசிஸ்” என்ற உடல் நல கேடு விளைவிக்கும் அளவிலான அதிக வைட்டமின்கள் அடங்கியிருந்தது.அந்த “ஹைபர்விட்ட மினோசிஸ்” என்ற உடல்நல குறை ஏற்பட்டால், குமட்டல், மங்கலான கண்பார்வை, வீங்கிய கல்லீரல் போன்ற குறைகள் ஏற்படலாம். இதை நினைவூட்டி இந்த மருந்துகள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும், அது மட்டுமின்றி அறிவியல் தரம் பெறாத மருந்துகளை தான் பரிந்துரைப்பதில்லை எனவும் அந்த அமெரிக்க மருந்து ஊழியர்களிடம் தெரிவித்தேன்.

உடனே அந்த மூவரும், எனக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தாங்க. இதுனாலே டென்ஷனான நான் அவங்களை உடனே என் மையத்திலிருந்து வெளியேற சொன்னேன். என் இந்த கோபத்தை பார்த்த அந்த மூவரும், தங்களுக்கு இதே இந்தியாவில் அரசியல் செல்வாக்கு அதிகமிருப்பதாகவும் இதே மருந்துகளை மும்பையில் வேறு எதாவது பிரபல ஊட்டச்சத்து ஆலோசகர் மூலமாக இந்த மருந்தை பிரபல படுத்தவும், விற்கவும் முயல்வோம் என ஆணவமா தெரிவிச்சாங்க” என்று கூறி கண்களை மூடிக் கொண்டார் திவ்யா

இந்த சம்பவம் நடந்தது ஒரு மாலை நேரம். அப்போது என் அவருடைய உதவியாளர் பெண்மணி மட்டுமே இருந்துள்ளனர். திவ்யா அவர்களை தன்னுடைய ஆலோசனை மையத்தை விட்டு வெளியேற சொன்னவுடன், அவர்களுக்கு கோபம் அதிகமாகி திவ்யாவிடம் எதிர்த்து குரல் எழுப்பியுள்ளனர். “ வெளிநாட்டினரை எவ்வாறு உபசரிக்க வேண்டும் என்பது உங்களை போன்ற இந்தியர்களுக்கு தெரியாதா? வெளிநாட்டினரை இவ்வாறு அவமதிக்கலாமா? நீங்கள் நெறி முறையற்றவர்கள்…எங்களுக்கு இந்தியாவில் அரசியல் செல்வாக்கு மிக அதிகமாக உள்ளது” என்று மிரட்டும் தோரணத்தில் எச்சரித்துள்ளனர்.இந்த மிரட்டல் சம்பந்தமாக, திவ்யா சத்யராஜ் தன் தந்தையிடம் சொல்லிய நிலையில் தற்போது காவல் துறையினரிடம் புகார் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.