‘கட்டப்பா’ சத்யராஜ் மகள் மிரட்டல்!- போலீஸில் புகார்?

‘கட்டப்பா’ சத்யராஜ் மகள் மிரட்டல்!- போலீஸில் புகார்?

நடிகர் சத்யராஜ்  ஒரே மகள் திவ்யா நியூட்டிஷி யனிஸ்ட் (உணவு ஆலோசக மருத்துவர்) ஆக உள்ளார். இவரும் 'A Bit To Be Fit' என்ற டைட்டிலில் உருவான ஆவணப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த ஆவணப்படம் விளையாட்டு மற்றும் ஊட்ட ச்சத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சமீபத்தில் இவரது கிளினிக்கிற்கு வந்த வெளிநாட்டினர் 2 பேர் மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது. இது பற்றி திவ்யா கூறியதாவது: மூணு நாளைக்கு முன்னாடி இரண்டு ஆம்பளையும் ஒரு பெண்மணியும் வந்தாங்க. அவர்களில் இருவர் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்கள், மற்றொருவர் இந்தியாவை சேர்ந்தவர். என் ஆலோசனை மையத்திற்கு வருகைத் தந்த மூவரும், தாங்கள் ஒரு மருந்து நிறுவனத்திலிருந்து வருவதாக சொன்னாங்க. உடனே அவர்களிடம் குறிக்கிட்டு ’நான் வைட்டமின், சத்து பானம், ஊடச்சத்துகான பண்டங்கள் ஆகியவற்றை மட்டுமே பரிந்துரைப்பதாக தெரிவித்தேன். அதைப் பொருட்படுத்தாத அந்த அமெரிக்க மருந்து நிறுவன பிரதிநிதிர்கள், தாங்கள் கொண்டு…
Read More