‘8 தோட்டாக்கள்’ படத்திற்காக அமைக்கப்பட்ட திருவிழா அரங்கம் !

வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன்  மற்றும்  ‘பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்’  –  ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து வரும்  திரைப்படம் ‘8 தோட்டாக்கள்’.  இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி வரும்  ‘8 தோட்டாக்கள்’ படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம்  ‘மஹேஷிந்தெ பிரதிகாரம்’ புகழ்) முன்னணி கதாப்பாத்திரங்களிலும், நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர்  கே எஸ் சுந்தரமூர்த்தி (அவம்’ ‘கிரகணம்’), கலை இயக்குநர் சதீஸ் குமார் (‘ஜோக்கர்’, வி ஐ பி 2) என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை இந்த ‘8 தோட்டாக்கள்’ திரைப்படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. “எங்கள் படத்தின் ஒரு பாடலுக்கு, திருவிழாவை போன்ற காட்சிகள் தேவைப்பட்டது. அதற்காக  எங்களின் கலை இயக்குநர் சதீஷ் குமாரும், மும்பையில் இருந்து வந்திருக்கும் ஒரு தொழில் நுட்ப கலைஞரும் இணைந்து, டி ஆர் கார்டன்ஸில் 1000 பேரை  கொண்டு ஒரு பிரம்மாண்ட திருவிழா போன்று காட்சியளிக்கும் அரங்கத்தை அமைத்து இருக்கின்றனர்.  நிச்சயமாக இந்த பாடலை பார்க்கும் ரசிகர்கள் ஒவ்வொருவரும், திருவிழாவில் கலந்து கொண்ட அனுபவத்தை பெறுவர்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ்.