“பியார் பிரேமா காதல்” இயக்குனருக்கு கார் பரிசு கொடுத்த தயாரிப்பாளர்கள்!

கடந்த வாரம் வெளி வந்து பெரும் வெற்றி பெற்று , வசூலில் சாதனை புரிந்து வரும் “பியார் பிரேமா காதல்” படத்தின் தயாரிப்பளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, இர்பான் மாலிக், ராஜ ராஜன் ஆகியோர் படத்தின் இயக்குனருக்கு ஒரு கார் பரிசாக கொடுத்து மகிழ்ந்தனர்.
” இந்த கார் எனக்கு மகிழ்ச்சி தந்தாலும், என் மீது நம்பிக்கை வைத்து , எனக்கு சுதந்திரம் தந்து, நான் எதிர்பார்த்ததை  விட விளம்பர யுத்திகள் பல செய்து என்னை மகிழ்ச்சியில் திக்கு முக்காட செய்த என் தயாரிப்பாளர்களின் என் மீதான நம்பிக்கை யும், அன்பும் தான் எனக்கு கிடைத்த மிக பெரிய பரிசு. வளர்ந்து வரும் இயக்குன ருக்கு இதை விட வேறு என்ன கிடைத்திட வேண்டும்” என்கிறார் இயக்குனர் இலன்.
தயாரிப்பாளர்களில் ஒருவரான கே productions ராஜராஜன் கூறுகையில் ” ஒரு தயாரிப்பாளராக ஒரு படத்தின் வெற்றி என்பது வெறும் வசூல் அடிப்படையில் மட்டுமே பார்க்க கூடாது என்பேன். படம் பார்க்க வரும் ரசிகன் முகம்  மலர்ச்சியுடன், அயர்ச்சி இல்லாமல் திரை அரங்கை விட்டு வெளியே வந்தால், அவனுடைய அந்த திருப்தி தான்,  தயாரிப்பாளருக்கு பெருமை, தயாரிக்கும் நிறுவனத்துக்கும் பெருமை. எங்கள் இயக்குனர் இலன் எங்களுக்கு அந்த பெருமையை அளித்து உள்ளார். யுவனின் இசைக்கு ஈடு தந்து படத்தின் வெற்றியை கோலாகலமாக்கி இருக்கிறார். அந்த உழைப்புக்கும் , உத்வேகத்துக்கும் எங்களின் சிறிய பரிசு தான் இந்த கார். இலன் தந்த நம்பிக்கை, எங்களுக்கு மிக பெரிய உந்துதல்.  இன்னமும் இளைய இயக்குனர்களை எங்கள் தயாரிப்பில் அறிமுகம் செய்து , தமிழ் திரை உலகிற்கு  பெருமை சேர்ப்போம்’ என்றார்.
ஹரிஷ் கல்யாண்=ரைசா வில்சன் ஆகியோர்  நடிப்பில் ஆகஸ்ட் 10 ஆம்.தேதி வெளி வந்த “பியார் பிரேமா காதல்” படம் பல வசூல் சாதனைகளை புரிந்துக் கொண்டு இருக்கிறது.