இந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளிவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது.
இசையில் புதுமை வெளிகொண்டுவருவதில் வித்தகரான ஏ.ஆர்.ரஹமான் தற்போது மற்றொரு புதுமையையும் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். ஆனால் இந்த முறை இசை நிகழ்ச்சியை திரைவாயிலாக.
ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி “தி இஸ் இட்” என்ற பெயரில் இசைத்திரைப்படமாக வெளியானது. அதை போன்று இந்தியாவில் முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான் அமேரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை முதன்முறையாக உலகெங்கும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. YM மூவிஸுடன் இணைந்து கிரேப் வென்ச்சர்ஸ் தயாரித்துள்ள “ஒன் ஹார்ட்” இசைத்திரைப்படம் பிப்ரவரி 5ம் நாள் கனடா, டோரண்டோவில் உள்ள ஸ்காட்டியா பேங்க் திரையரங்கில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது.
“ஒன் ஹார்ட்” என பெயரிடப்பட்டுள்ள இந்த இசைத்திரைப்படத்தில் அமேரிக்காவில் 14 நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹமான் தலைமையிலான இசை சுற்றுபயணம், இசை நிகழ்ச்சி, இசை ஒத்திகை மற்றும் பிரத்யேக பேட்டிகள் ஆகியவை இடம்பெற்றன. திரையுலகில் தனது 25ம் ஆண்டில் அடியேடுத்து வைப்பதின் நினைவாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் இசை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
உலகெங்கும் ஏப்ரல் மாதம் “ஒன் ஹார்ட்” இசைத்திரைப்படம் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
Related posts:
அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ருஸ்ஸோ பிரதர்ஸின் AGBO வழங்கும் சீட்டடெல் பிரீமியர்April 19, 2023
"ஒன் ஹார்ட் மியூசிஷியன்ஸ் பவுண்டேஷன்" தூதரானார் ஏ.ஆர்.ரஹ்மான்March 16, 2017
கேன்ஸ் விழாவில் தனக்கு நிகழ்ந்த மிரட்டல்களை பற்றி சன்னி லியோன் பேசியுள்ளார்May 25, 2023
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்! தலைவர்கள் & திரைபிரமுகர்கள் அஞ்சலிFebruary 25, 2018
உலக சினிமா வரலாற்றில் நீளமான படம் - 'ஆம்பியன்ஸ்'!July 22, 2017