Equaliser படம் உலகம் முழுக்க பயங்கர ஹிட்டடித்த படம். ஜான் விக் மாதிரி ஒர்ய் ரிட்டயர்ட் ராணுவ வீரனை பற்றிய கதை. தன் பாட்டுக்கு தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர் முன்னால் ஏதாவது அநியாயம் நடந்தால் பொங்கி எழுவார் பாருங்கள். நொடியில் எதிரிப்படையை நொறுக்கி விடுவார்.
இரண்டு பாகங்கள் வந்து ஹிட்டடித்த பின்பு இப்போது மூன்றாம் பாகம் வந்திருக்கிறது.
டென்சல் வாஷிங்டன் விஜயின் ஒரு ஃபோட்டாவால் இங்கு ஃபேமஸாகிவிட்டார். ஆனால் ஹாலிவுட்டில் அவர் தனி வரலாறு படைத்திருக்கிறார்.
Equaliser பட வழக்கம் போல் இந்தபடத்திலும் கதை மிக எளிமையானது தான். ஒரு கொள்ளையனை பழி தீர்க்க, சிசிலி வரை பயணமாகிறார் நாயகன். அவருக்கு அடிபட்டுவிட அங்கு ஒரு அமைதியான நகரில் ஓய்வு எடுக்கிறார். அங்கு உள்ளூர் ரவுடிகள் தொல்லை கொடுக்க அதை எப்படி வழக்கம் போல் தன் பாணியில் முறியடிக்கிறார் என்பது தான் கதை.
டென்சல் வாஷிங்டன் ஒரு கதாப்பாத்திரத்தை எப்படி எடுத்துக்கொண்டு நடிப்பது என்பதற்கு பாடமெடுத்திருக்கிறார். அவர் நடித்த பார்த்த படங்கள் பார்த்தாலே இது எளிதாக புரிந்து விடும். கிட்டதட்ட சூப்பர் ஹீரோ மாதிரியான கதாப்பாத்திரம். அவருக்கு எழுதப்பட்ட வசனங்கள் அத்தனையும் பட்டாசு. ரெஸ்டாரண்ட் காட்சி ஒன்று வரும். அதன் செட்டப், வசனங்கள், இசை, ஒளிபதிவு அத்தனையும் உட்சம். தியேட்டர் கதிகலங்கியது.
முந்தைய படங்கள் போல இல்லாமல், இதில் ஆக்சன் காட்சிகள் ரொம்ப கம்மி. எமோஷன் ஜாஸ்தி. ஆனால் இந்தப்படவரிசை பிடித்தவர்களுக்கு இந்தப்படம் ஒரு டிரிப்யூட் தான்.
இடையில் வரும் போதை மருந்து கடத்தல், சி ஐ ஏ விசாரணை எல்லாவற்றையும் திரைக்கதையில் இணைத்த விதம் அருமை. அதிலும் க்ளைமாக்ஸில் ஏன் என்னை தேர்ந்தெடுத்தீர்கள் எனும் கேள்விக்கு டென்சில் தரும் பதில் அட்டகாசம்.
ஒரு எமோஷனல் ஆக்சன் படம் பார்க்க வேண்டுமா கண்ணை மூடிக்கொண்டு பொய் என்ஜாய் செய்து வாருங்கள் !!