ஷூட்டிங் ஸ்பாட்டில் மோதிக்கொண்ட யோகிபாபு உதவியாளர்கள் !

0
159

ஷூட்டிங் ஸ்பாட்டில் மோதிக்கொண்ட யோகிபாபு உதவியாளர்கள் !

போடிநாயக்கனூர் குரங்கணி, கொட்டகுடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மலையோரம் வீசும் காற்று என்றபடத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது

தமிழ் சினிமா காமெடி நடிகர்  யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  கடந்த ஒருவாரத்திற்கு மேல் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் குரங்கணி மலைப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று குரங்கணி பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது யோகி பாபுவின்உதவியாளர் சேலம் பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த  சதாம் உசேன்(35), மற்றும் யோகி பாபுவின் கார்டிரைவர் சென்னை ஆழ்வார்திருநகரை சேர்ந்த ராமச்சந்திரன் (31) ஆகிய இருவருக்கும் வாக்குவாதம்ஏற்பட்டுள்ளது.

ஒருவருக்கொருவர் ஆவேசமாக திட்டிக்கொண்டு திடீரென்று கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்கள் இதனால்படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

இருவரும் மோதிக் கொண்டதில் யோகி பாபுவின் உதவியாளர்  சதாம் உசேனை கார் டிரைவர் ராமச்சந்திரன்மூக்கில் குத்தியதால் ரத்தக் காயம் ஏற்பட்டதாக யோகி பாபுவின் உதவியாளர் சதாம் உசேன் குரங்கணி காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இதனையடுத்து குரங்கணி  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். தனதுஉதவியாளர்கள் யோகிபாபு கவலையில் உள்ளாராம்.