11
Mar
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா (SVCC) தயாரிப்பு: பிவிஎஸ்என் பிரசாத் வழங்குபவர்: பாபிநீடு பி இணைத் தயாரிப்பு: பிரவீன் டேனியல் அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் “ASVINS” தரமணி (2017) & ராக்கி (2021) ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகரான வசந்த் ரவி, தற்போது சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லரான 'ASVINS' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். திரைக்கதை ஆசிரியரும் இயக்குநருமானமான தருண் தேஜா, இந்தியாவின் சென்னை மற்றும் ஜெர்மனியின் வொல்ப்ஸ்பர்க் என இரண்டையும் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார். அவரது சிந்தனையைத் தூண்டும் குறும்படங்களுக்காக அவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றில் சில பல்வேறு ஐரோப்பிய சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் ஐரோப்பாவில் உள்ள சுயாதீன திரைப்பட கம்யூனிட்டியில் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. தருண் இப்போது தனது 20 நிமிட பைலட் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்ட 'ASVINS' மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இது குறும்படமாக வெளியான…
