10
Nov
கோலிவுட்டில் அரசல் புரசலாக வெடித்து புதாகரமான விவகாரத்தால் திணறிக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலகத்தில் திடீர் திருப்பமாக புதிய தமிழ்த் திரைப்படங்கள் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளன. வி.பி.எஃப். கட்டணம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கும், கியூப் நிறுவனத்திற்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் புதிய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் கியூப் நிறுவனம் அதிரடியாக இந்த நவம்பர் மாதம் வரையிலும் வி.பி.எஃப். கட்டணம் ரத்து என்ற சலுகையை அறிவித்தது. இந்த ரத்து சலுகையை எதிர்பார்க்காத தயாரிப்பாளர் சங்கங்கள் இன்று அவசரமாக கூடி இது பற்றி விவாதித்தன. பின்பு இந்த 2 வார சலுகையைப் பயன்படுத்தி புதிய திரைப்படங்களை வெளியிடுவது என்று ஒருமித்தக் கருத்தினை எடுத்துள்ளன. தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான இயக்குநர் இமயம் பாரதிராஜா இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள்…