29
May
ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் சங்கமித்ரா என்ற பிரம்மாண்ட படம் சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகிவருகிறது . இந்த படத்தில் ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்டோருடன் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்தது. இதனிடையே இப்படத்தின் கதை என்ன என்பது குறித்து படக்குழு தெரிவித்துள்ளது. சங்கமித்ரா 8ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. சங்மித்ரா ஒரு பேரழகி. அவள் தன் ராஜ்ஜியத்தை காக்க போராடும் போது சந்திக்கும் இன்னல்களும், துயரங்களும் தான் படத்தின் கதை. பல்வேறு ராஜ்ஜியங்கள், உறவுகள் குறித்து இப்படம் பேசவுள்ளதாகவும். திரைப்பட மகுடத்தில் சங்கமித்ரா ஒரு ரத்தினமாக ஜொலிக்கும் என படக்குழு தரப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.இது கற்பனை கதை என்றும். தொன்மையான தமிழ் மொழிக்கு இந்தப்படம் சமர்ப்பணம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கமித்ரா இரண்டு பாகங்களாக வெளியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இப்படி தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புடன் தயாரிப்பில் இருக்கும் படமான 'சங்கமித்ரா'. கான் திரைப்பட விழாவில் இப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அறிமுக விழாவில் இயக்குநர்…