அகமதாபாத் தமிழ் சங்கம் நடத்திய ’சிவாஜியும் தமிழும்’!

அகமதாபாத் தமிழ் சங்கம் நடத்திய ’சிவாஜியும் தமிழும்’!

அகமதாபாத் தமிழ் சங்கம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜியின் 90 -வது பிறந்த நாளை முன்னிட்டு ”சிவாஜியும் தமிழும்” என்ற தலைப்பில் மாபெரும் விழா சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்தது. விழாவில் அகமதாபாத் தமிழ் சங்க தலைவர் முனைவர். எஸ். கவிதாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். எஸ்.ஆர்.எம். கல்வி குழுமங்களின் நிறுவன வேந்தர் தா.இரா. பாரிவேந்தர் தலைமை வகித்தார். விழாவில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, வி.ஜி.பி. குழும தலைவர் வி.ஜி.பி. சந்தோஷம், வசந்த் அன்ட் கோ தலைவரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ., புதுவை தமிழ் சங்க தலைவர் வி.முத்து, நக்கீரன் தமிழ் சங்க பொதுச்செயலாளர் மீடியா பாஸ்கர்  ​ மற்றும் கவிஞர் இன்பா ​ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட இயக்குனர் கே. பாக்யராஜ் கலந்து கொண்டார். ”தேசியத்திற்கு சிவாஜி” என்ற தலைப்பில் எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அந்த காலத்தில்…
Read More
சிவாஜி கணேசன் கொடை வள்ளல் தனம் எத்தனைப் பேருக்கு தெரியும்?

சிவாஜி கணேசன் கொடை வள்ளல் தனம் எத்தனைப் பேருக்கு தெரியும்?

😡தமிழ்நாடே அறியாத நடிகர் திலகத்தின் மறுபக்கம்..!! 😷ஏன் ஊடகங்கள் இவற்றை வெளி கொணரவில்லை?  நடிகர் திலகம் சிவாஜி அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் , 1959ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்யுள்ளார். அது மட்டுமின்றி , 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கி உள்ளார். 1962ல் இந்திய – சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார். புதுவை அரசின் பகலுணவு திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் கொடுத்துள்ளார்..நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார்.பெங்களூரில் நாடகை அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார். 1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் அள்ளிகொடுத்துள்ளார். 1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில்…
Read More
சிவாஜி மணி மண்டப விழாவில் முதல்வர் கலந்துக்கணும்! – பிரபு வேண்டுகோள்!

சிவாஜி மணி மண்டப விழாவில் முதல்வர் கலந்துக்கணும்! – பிரபு வேண்டுகோள்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு மண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்க வேண்டும் என்பதே அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களின் விருப்பம் என்றும், இந்த விஷயத்தில் சாதகமான பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் நடிகர் பிரபு கூறியுள்ளார். இது தொடர்பாக சிவாஜி குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் சார்பில் அவர் மாநில தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சருக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:- அப்பாவின் (சிவாஜி) நினைவு மண்டபம் என்பது மறைந்த முதல மைச்சர் ஜெயலலிதாவின் மிகப் பெரிய கனவு திட்டமாகும். அவர் உயிரோடு இருந்திருந்தால் திறப்பு விழாவுக்கு தலைமை வகித்து  சகாப்தம் படைத்த எங்களது தந்தை நடிகர் திலகத்தின் ஆன்மாவுக்கு திருப்தி அளித்திருப்பார். நாங்களும் மகிழ்ச்சியடைந்திருப்போம். ஆனால் மிகப்பெரிய நடிகரின் நினைவு மண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்கவில்லை என்பதை அறிந்து நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். திரைப்படங்கள் மூலம் தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்துக்கும் அவர் மிகப்…
Read More