அந்நியன் கதை உரிமை யாரிடம்? – ஆஸ்கார் ரவி Vs ஷங்கர் தரப்பு முழு தகவல்கள்!

அந்நியன் கதை உரிமை யாரிடம்? – ஆஸ்கார் ரவி Vs ஷங்கர் தரப்பு முழு தகவல்கள்!

விக்ரம், சதா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டில் அந்நியன் திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படத்தை ஆஸ்கா் ஃபிலிம்ஸ் சார்பில் வி. ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். இந்த நிலையில், இந்தப் படத்தை ரன்வீர் சிங்கை வைத்து இந்தியில் ரீ – மேக் செய்யப்போவதாக இயக்குநர் ஷங்கர் நேற்று அறிவித்து இருந்தார். அந்த இந்திப் படத்தை ஜெயந்திலால் கடா என்பவர் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில், அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் வி. ரவிச்சந்திரன் இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அந்நியன் படத்தின் கதைக்கான முழு உரிமையும் தன்னிடமே இருப்பதாகவும் அதனை இந்தியில் தயாரிக்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து ஆஸ்கார் ரவி அனுப்பிய நோட்டீசில், “அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் நான்தான். படத்தின் கதை உரிமை முழுவதையும் எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து நான்தான் வாங்கியிருக்கிறேன். அதற்கான பணமும் அவருக்குக் கொடுக்கப்பட்டு விட்டது. அந்தக் கதையின்…
Read More