ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’

ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’

STUDIO GREEN சார்பில்  K.E. ஞானவேல்ராஜா  தயாரித்து வழங்கும்  படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்.  இப் புதிய படத்துக்கு 'கஜினிகாந்த்' என்று பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான 'பலே பலே மகாடிவோய்' படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது.இப்படத்தை ஹர ஹர மஹா தேவகி ,மற்றும்  இருட்டு  அறையில்  முரட்டு  குத்துபடங்களை இயக்கிய சன்தோஷ் P ஜெயக்குமார் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை இன்று காலை (29-11-2017)  இனிதே  நடைபெற்றது.  இப்படத்தில்  ஆர்யாவுக்குஜோடியாக “வனமகன்” சாயிஸா நடிக்கிறார்.  மேலும் பாலமுரளி பாலு இசையமைக்க, பல்லுஅவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்பை கவனிக்க, கோபி ஆனந்த் கலைஇயக்குத்துக்கு பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது.
Read More
விஜய் சேதுபதி மார்கெட் வேல்யூ என்னான்னு தெரியுமா?

விஜய் சேதுபதி மார்கெட் வேல்யூ என்னான்னு தெரியுமா?

விக்ரம் வேதா ’விற்கு பிறகு ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதியின் மார்கெட்  வேல்யூ   அதிகரித்திருப்பதாக திரையுலகினர் கருதினர். இதனை மெய்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா ’ படத்தினை படபிடிப்பு செல்லும் முன்பே ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது. இது குறித்து படக்குழுவினர் பேசும் போது,‘விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ‘ஜுங்கா ’வின் முதற்கட்ட படபிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் முடிவடைந்திருக்கிறது. ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற நிறுவனத்தார் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்கள். இது விஜய் சேதுபதியின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லதொரு அடையாளம் ’ என்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சயீஷா சைகல் நடிக்கிறார். கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கோகுல். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ’ என்ற வெற்றிப்படத்தில்…
Read More
விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கப் போகும் ஜுங்கா பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கப் போகும் ஜுங்கா பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

காஷ்மோரா' படத்தைத் தொடர்ந்து கோகுல் இயக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிப்பது உறுதியாகி முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டது. தற்போது 'ஜுங்கா' எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை சுமார் ரூ.20 கோடி பொருட்செலவில் தானே தயாரித்து, நடிக்க முடிவு செய்துள்ளார் விஜய் சேதுபதி. 'ஜுங்கா' குறித்து இயக்குநர் கோகுல் கூறிய போது, “'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று விஜய் சேதுபதி கூறியிருந்தார். அப்போது பொருத்தமான கதை உருவானவுடன் நானே வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். அவருக்கு ஏற்ற வகையில் ‘ஜுங்கா’ கதை தயாரானதும், சந்தித்து கதையைக் கூறினேன். முழுக்கதையையும் கேட்டுவிட்டு, சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு இதனை நானே தயாரிக்கிறேன் என்றார். ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஏனெனில் படத்தின் பட்ஜெட் தோராயமாக இருபது கோடியைத் தாண்டும். அவர் இதுவரை நடித்த படங்களிலேயே இது தான் அதிக பொருட்செலவில் தயாராகும் படம். அதனால் வேறு தயாரிப்பாளரைக்…
Read More