ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’

STUDIO GREEN சார்பில்  K.E. ஞானவேல்ராஜா  தயாரித்து வழங்கும்  படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்.  இப் புதிய படத்துக்கு ‘கஜினிகாந்த்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான ‘பலே பலே மகாடிவோய்’ படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது.இப்படத்தை ஹர ஹர மஹா தேவகி ,மற்றும்  இருட்டு  அறையில்  முரட்டு  குத்துபடங்களை இயக்கிய சன்தோஷ் P ஜெயக்குமார் இயக்குகிறார்.

இப்படத்தின் பூஜை இன்று காலை (29-11-2017)  இனிதே  நடைபெற்றது.  இப்படத்தில்  ஆர்யாவுக்குஜோடியாக வனமகன்” சாயிஸா நடிக்கிறார்.  மேலும் பாலமுரளி பாலு இசையமைக்க, பல்லுஅவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்பை கவனிக்க, கோபி ஆனந்த் கலைஇயக்குத்துக்கு பொறுப்பேற்றிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது.