விக்ரம் வேதா ’விற்கு பிறகு ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதியின் மார்கெட் வேல்யூ அதிகரித்திருப்பதாக திரையுலகினர் கருதினர். இதனை மெய்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா ’ படத்தினை படபிடிப்பு செல்லும் முன்பே ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது.
![](https://cinemapressclub.com/wp-content/uploads/2017/09/unnamed-25.jpg)
இது குறித்து படக்குழுவினர் பேசும் போது,‘விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ‘ஜுங்கா ’வின் முதற்கட்ட படபிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் முடிவடைந்திருக்கிறது. ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற நிறுவனத்தார் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்கள். இது விஜய் சேதுபதியின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லதொரு அடையாளம் ’ என்றனர்.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சயீஷா சைகல் நடிக்கிறார். கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கோகுல். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ’ என்ற வெற்றிப்படத்தில் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
நடிகர் மாதவனுக்கு தோள்பட்டையில் ஆபரேஷன்: வைரலாகும் புகைப்படம்!February 26, 2018
கண்ணாடி பிரஸ் மீட் ஹைலைட்ஸ்!July 1, 2019
‘கொம்பு வச்ச சிங்கம்டா’ - சசிகுமார்-மடோனா செபாஸ்டியன் நடிக்கும் பட பூஜை!November 14, 2018
கல்விக்கா மலைகிராம மக்களின் போராட்டத்தை பற்றி உருவாகியுள்ள " எவனும் புத்தனில்லை " பட அறிவிப்பு!September 16, 2023
ஜெய்-பானு நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ -ஸூக்கு பூஜை போட்டாச்சு!February 22, 2019