7 வருடம் பின்னோக்கி இருந்த தமிழ் திரையுலகை காப்பாற்ற வேண்டும்! விஷால் ஆசை!

7 வருடம் பின்னோக்கி இருந்த தமிழ் திரையுலகை காப்பாற்ற வேண்டும்! விஷால் ஆசை!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், இயக்குநர் பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துப்பறிவாளன்'. அரோல் குரலி இசையமைத்து வரும் இப்படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்று, செப்டம்பர் 14-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இதற்காக இறுதிகட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் "நடிகர் சங்கம் - தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பணிகளால் சரியாக படப்பிடிப்புக்குச் செல்ல முடியவில்லை. ஜனவரியில் ஒரு படம், ஏப்ரலில் ஒரு படம் என்று திட்டமிட்டு இருந்தீர்கள். அதுவும் முடியாமல் போய்விட்டது. இதனால் நீங்கள் வாங்கி கடனுக்கு வட்டி அதிகமாக கட்ட வேண்டியதிருக்குமே. இதனால் உங்களுக்கு பெரிய இழப்பு தானே" என்ற கேள்வியை விஷாலிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: இந்த இழப்பை எல்லாம் 'சண்டக்கோழி 2' படத்தின் மூலம் மொத்தமாக கூட சரி செய்து கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் எனக்கு…
Read More
விஷால் + லிங்குசாமி கூட்டணியில் சண்டக்கோழி 2 தயாராகப் போகுது!

விஷால் + லிங்குசாமி கூட்டணியில் சண்டக்கோழி 2 தயாராகப் போகுது!

தற்போது, விஷால் கைவசம் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’, பி.எஸ்.மித்ரனின் ‘இரும்பு திரை’, லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2’, வெங்கடேஷின் ‘நாளை நமதே’, பேரரசு படம், மலையாளத்தில் உன்னிகிருஷ்ணனின் ‘வில்லன்’ என அடுத்தடுத்து படங்கள் தயாராகி வருகிறது. இதில் ‘சண்டக்கோழி 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது. காரணம், இதன் முதல் பாகம் 2005-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், ராஜ்கிரண், லால், கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய், சண்முகராஜன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடவுள்ளார். மிக முக்கிய வேடத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக சக்தி பணியாற்றவுள்ளாராம். படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்.. இந்த…
Read More