பூஜையுடன் தொடங்கிய ஆர்.கே சுரேஷின் ‘ஒயிட் ரோஸ்’

பூஜையுடன் தொடங்கிய ஆர்.கே சுரேஷின் ‘ஒயிட் ரோஸ்’

  நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒயிட் ரோஸ்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'ஒயிட் ரோஸ்'. இதில் ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் தயாரிப்பாளர் ரூஸோ, மற்றொரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகை 'கயல்' ஆனந்தி ஆர். கே. சுரேசிற்கு ஜோடியாக நடிக்கிறார். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை டி. என். கபிலன் கவனிக்க, சண்டைப் பயிற்சியை பிரபு அமைக்கிறார். சைக்கோ திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த 'ஒயிட் ரோஸ்' திரைப்படத்தை ஸ்டூடியோ 9 பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். கே .சுரேஷ், தயாரிப்பாளர் எஸ். ரூஸோவுடன் இணைந்து…
Read More
மலையாள ரீமேக் ‘விசித்திரன்’ எப்படி இருக்கு?

மலையாள ரீமேக் ‘விசித்திரன்’ எப்படி இருக்கு?

  எழுத்து & இயக்கம்: பத்மநாபன் தயாரிப்பு: பாலா ஸ்டூடியோஸ், ஸ்டூடியோ 9, Shark Pictures இசை: ஜீவி பிரகாஷ் குமார் ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன் படதொகுப்பு: சதீஷ் சூர்யா நடிகர்கள்: ஆர் கே சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி, இளவரசு, பகவதி பெருமாள் முன்னாள் காவலாளி ஒருவரது முன்னாள் மனைவி ஒரு விபத்தி இறக்கிறாள். அந்த விபத்தை ஆராய அந்த காவலாளி முயல்கையில் அது ஒரு மிகப்பெரிய மருத்துவ குற்றத்தில் முடிகிறது. அந்த குற்றவாளிகளை அந்த காவலாளி கண்டுபிடித்தாரா, இல்லையா என்பது தான் கதை. மலையாளத்தில் வெளியான ஜோசப் என்ற திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் இந்த விசித்திரன் திரைப்படம், மலையாளத்தில் இந்த படம் ஒரு ஸ்லோ பர்ன் திரில்லர் வகையை சார்ந்தது. இந்த மாதிரி திரைப்படங்களுக்கு மலையாள சினிமாவில் நல்ல வரவேற்பு உண்டு . ஆனால் தமிழ் சினிமாவில்  ஸ்லோ பர்ன் திரில்லர் வகை படங்கள் வருவதில்லை, அதனால் அதற்கு…
Read More
விஜயகாந்த் ரோலில் நடிக்கும் RK சுரேஷ் !

விஜயகாந்த் ரோலில் நடிக்கும் RK சுரேஷ் !

தமிழ் சினிமாவில் பிளாக்லஸ்டர் வெற்றியை பெற்ற சின்னக்கவுண்டர் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இதில் RK சுரேஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் தயாரிப்பு துறையில் கால்பதித்து சிறு சிறு வேடங்கள் மூலம் நாயகனாக வளர்ந்துள்ளார். தற்போது காடுவெட்டி குரு உட்பட சில படங்களில் நாயகனாக நடித்து நேற்று பிறந்த நாள் கொண்டாட்ட அறிவிப்பாக தான் நடிக்கும் அடுத்த படத்தை அறிவித்துள்ளார். நடிகர் விஜயகாந்த் நடிப்பில், தமிழில் பிரமாண்ட வெற்றி பெற்ற சின்ன கவுண்டர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சின்ன கவுண்டர் படத்தை இயக்கிய, RV உதயகுமார் இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் விஜயகாந்த் பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் சின்ன கவுண்டர் படத்தின் தொடர்ச்சியாக இருக்குமென்று கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Read More
ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படம்  ‘தென்னாட்டான் ‘ !

ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படம் ‘தென்னாட்டான் ‘ !

ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படமான  'தென்னாட்டான் ' படத்துக்கு  நேற்று பூஜை போடப்பட்டது. தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் பயணித்து வருபவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ். கை நிறைய படங்களுடன் ஓய்வின்றி நடித்து வரும் அவரது அடுத்த படமான 'தென்னாட்டான் 'படத்துக்கு  நேற்று பூஜை போடப்பட்டது. இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்கிறார்.  படத்தைப்  புதுமுக இயக்குநர்  எம்.விஜய் பாண்டி இயக்குகிறார். திவிஷா ரேஷ்மா கிரியேஷன் சார்பில் சரவணன் தயாரிக்கிறார். ' தென்னாட்டான்  ' பட பூஜை இன்று தயாரிப்பு அலுவலகத்தில் எளிமையாக போடப்பட்டது. படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். ஆகஸ்ட் இறுதியில் படப்பிடிப்பைப்  தொடங்குகிறார்கள்.
Read More