2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்!

2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்!

லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்காக 2.0 படக்குழுவினர் மேலும் இப்படத்திற்குப் பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது வரும் அக்டோபர் 26ம் தேதி மாலை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய 2.0 படக்குழுவினர், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிக்காப்டர் மூலமாக உலகின் ஒரே ஒரு 7நட்சத்திர ஹோட்டலான Burj- Al – Arab செல்கின்றனர். அங்கு உலகளாவிய 2.0 படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. உலகில் முக்கிய பத்திரிக்கைகளின் நிருபர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ் வைத் தொடர்ந்து 2.0 படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி 27ம் தேதி…
Read More
“‘சோலோ’ நான்கு கதைகளை உள்ளடக்கிய ஒரு ஆந்தாலஜி திரைப்படம்! .

“‘சோலோ’ நான்கு கதைகளை உள்ளடக்கிய ஒரு ஆந்தாலஜி திரைப்படம்! .

ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்’ , கெட் அவே ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சோலோ’. துல்கர் சல்மான், தன்ஷிகா, நேஹா ஷர்மா, ஸ்ருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் தயாராகியிருக்கும் இந்த படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். 3 ஒளிப்பதிவாளர்கள், 11 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ள இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நாயகன் துல்கர் சல்மான், “இப்போது இதுவரைக்கும் நீங்கள் பார்த்தது வெறும் டீசர் தான். படம் இன்னும் உங்களை ஆச்சர்யப்படுத்தும். உலகத்தின் பல பகுதிகளில் ஒரே நாளில் வெளியாகும் என் முதல் படம். ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் படத்தை எடுத்தது சாதாரண விஷயம் கிடையாது. ஒரே காட்சியை திரும்ப திரும்ப இரு மொழிகளிலும் எடுத்தது சவாலாக இருந்தது. தமிழ்,…
Read More
‘தரமணி’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் .

‘தரமணி’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் .

கடந்த வாரம் ரிலீசாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற 'தரமணி கதை அமைப்பாலும், தேர்ந்த நடிப்பாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று உள்ளது. இப்படம் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் J சதிஷ் குமாரை 'தரமணி' மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெருகி வரும் விமர்சனமும், கூடி வரும் ரசிகர்களும் தரும் ஆதரவை தொடர்ந்து 'தரமணி' படத்தின் காட்சிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது, மக்களின் ஏகோபித்த வரவேற்பும் பாராட்டும் இந்த படத்துக்கு வணிகரீதியான பெரும் வெற்றியை கொடுத்துள்ளது. மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற தரமான படங்களை தவறாமல் பார்த்து அந்த படம் சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்தோ போனிலோ மனதார பாராட்டும் வழக்கம் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தரமணி படத்தை நேற்று பார்த்தார். தயாரிப்பாளர் J சதிஷ் குமாரை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.'' இது போன்ற ஒரு வாழும் சாதனையாளரிடமிருந்து அழைப்பு வரும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. மகிழ்ச்சியான…
Read More