05
Sep
மின்னல் முரளி ஹீரோ டோவினோ தாமஸின் "ARM" டிரெய்லரைப் பார்த்து, KGF படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் பாராட்டியுள்ளார். ‘மின்னல் முரளி’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த டோவினோ தாமஸ், தற்போது ‘ARM’ படத்தில் மணியன், குஞ்சிக்கெழு, அஜயன் என மூன்று வேடங்களில் நடித்துள்ளார். பான்-இந்தியா ஃபேன்டஸி படமாக உருவாகி உள்ள ARM படத்தை மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் பேனர் கீழ் அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்கிய உள்ளார். "ARM" முழுக்க முழுக்க 3டியில் தயாரிக்கப்பட்டு மலையாள வரலாற்றில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களில் ஒன்றாக உள்ளது. இப்படம் செப்டம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தயாரிப்பாளர்கள் வேகமான ப்ரோமோஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆகஸ்ட் 25 அன்று வெளியிடப்பட்ட "ARM" இன் ட்ரெய்லர் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது, ஒவ்வொரு மொழியிலும் மில்லியன் கணக்கான பார்வைகளைப்…