06
Sep
1980-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சாந்தி கிருஷ்ணா. சிவப்பு மல்லி படத்தில் விஜயகாந்த் ஜோடியாக அறிமுகமானவர். அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் பாரதி-வாசு ஜோடி இயக்கிய பன்னீர் புஷ்பங்கள் படத்தின் மூலம் புகழ்பெற்றார். அதில் அவர் சுரேஷ் ஜோடியாக நடித்தார். சின்ன முள் பெரிய முள், மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல், அன்புள்ள மலரே, நேருக்கு நேர் உள்பட பல படங்களில் நடித்தார். 50க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்தார். கொஞ்சம் பிசியாகவே இருந்த சாந்தி கிருஷ்ணா சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அவரை அழைத்து வந்திருக்கிறார் மலையாள நடிகர் நிவின் பாலி. அவர் தயாரித்து, நடிக்கும் ஞண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். பெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் பிஜு படத்திற்கு பிறகு அவர் தயாரிக்கும் இரண்டாவது படம் இது தான். இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக புதுமுக கதாநாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார்.…