31
Dec
உடலில் என்ன வேண்டுமானாலும் குறை இருக்கலாம் ஆனால் அது மனிதனின் தரத்த்தை நிர்ணயம் செய்து விடாது. உடலில் குறை கொண்டவர்களும் மனிதர்களே .. அவர்கள் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை சொல்லும் படம் தான் மதிமாறன். திருநெல்வேலியில் உள்ள கிராமத்தில் தபால்காரராக இருக்கும் எம் எஸ் பாஸ்கருக்கு இரட்டைக் குழந்தைகள். அதில் ஒருவர் வெங்கட் செங்குட்டுவன் (நெடுமாறன்), மற்றொருவர் இவானா (மதி). இதில் வெங்கட் உயரத்தில் வளர்ச்சி குறைவாக இருக்கிறார். அப்பா போல தபால்காராக ஆக வேண்டும் என்பது இவரது ஆசை.ஊரில் உள்ளவர்கள் கேலியும் கிண்டலும் செய்ய எதை பற்றியும் கவலைப்படாமல் தனது திறமையை படிப்பிலும், அறிவிலும் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே அக்காவின் ஆதரவில் வளர்ந்து வருகிறார். ஒருநாள், இவானா தனது கல்லூரி பேராசிரியரோடு ஓடி போய்விட்டார் என்ற செய்தியறிந்து எம் எஸ் பாஸ்கரும் அவரது மனைவியும் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து விடுகிறார்கள். இதன் பிறகு அக்காவைத்…