நடிகர் சங்கம் மறைந்த நடிகர் மனோபாலாவுக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்தவுள்ளது

நடிகர் சங்கம் மறைந்த நடிகர் மனோபாலாவுக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்தவுள்ளது

  தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக கலைஞராக விளங்கியவர் மனோபாலா. இவருக்கு ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் கல்லீரல் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மனோபாலா இதற்கான சிகிச்சையை வீட்டில் இருந்தபடியே எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், மனோபாலா மே மூன்றாம் தேதி உயிரிழந்தார். இவரது மரணம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலக ரசிகர்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. துணை இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து, பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியது மட்டுமின்றி முன்னணி நடிகர்கள் முதல், தற்போதைய இளம் நடிகர்கள் என அனைவருடனும் இணைந்து பணியாகியுள்ளார் மனோபாலா. எப்போதும் தேனீ போல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் மனோ பாலா தன்னுடைய கடைசி நாட்களில், உடல் நலம் இன்றி, நிலை குலைந்து அமர்ந்திருக்கும் நிலையில்...…
Read More
விஷால் தலைமையிலா நடிகர் சங்கம்! அப்செட் குரல் அதிகமா கேட்குது!

விஷால் தலைமையிலா நடிகர் சங்கம்! அப்செட் குரல் அதிகமா கேட்குது!

நடிகர் சங்கத் தலீவர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தயாரிப்புக்காக, 21 கோடியே 29 லட்சம் ரூபாயை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றிருந்துச்சு. அது சிலபல அடிதடி பஞ்சாயத்துக்குப் பின்னர், அந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அப்போது, விஷாலும், லைகா நிறுவனமும் கடனை ஏற்று செலுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுச்சு மேலும், தங்களுக்கு கொடுக்கவேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், விஷால் “வீரமே வாகை சூடும்” என்ற படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்க வேண்டும் என மெட்ராஸ் ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்துச்சு. இந்த வழக்கை விசாரித்த சென்னைக்கு நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற…
Read More
நடிகர் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்ததை ஏன் வாபஸ் பெறுகிறேன்? – பொன்வண்ணன் விளக்கம்

நடிகர் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்ததை ஏன் வாபஸ் பெறுகிறேன்? – பொன்வண்ணன் விளக்கம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் துணைத்தலைவராகப் பதவி வகித்துவந்த பொன்வண்ணன், தன்னுடைய பதவியைத் திடீரென ராஜினாமா செய்துள்ளார். ‘நடிகர் சங்கத்தில் பதவி ஏற்கும்போது, பல கட்சியைச் சார்ந்தவர்கள் சங்கத்தில் இருப்பதால், எந்தக் கட்சியையும் சார்ந்து இருக்கக் கூடாது என முடிவெடுத்தோம். ஆனால், விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இது அவருடைய தனிப்பட்ட முடிவாக இருந்தாலும், எனக்குப் பிடிக்காததால் பதவியில் இருந்து விலகுகிறேன்’ என்று பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். மேலும், விஷாலின் அரசியல் பிரவேசம் குறித்து பலரும் தன்னிடம் கருத்து கேட்பதால், அதற்குப் பதில் அளிக்க விரும்பாமலும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அவர் நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவருடைய ராஜினாமா கடிதத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில், பொன்வண்ணனின் கருத்துக்கு மதிப்பளித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, தன்னுடைய நிலைப்பாடு பற்றி விளக்கினார் விஷால். மேலும்,…
Read More
யோவ். டி..ஆரூ? நீ யாருய்யா அந்த பொண்ணை  அவமரியாதை செய்ய?  விஷால் கோபம்!

யோவ். டி..ஆரூ? நீ யாருய்யா அந்த பொண்ணை அவமரியாதை செய்ய? விஷால் கோபம்!

நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன். டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே... நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் சாய்தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய்தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி…
Read More
அல்வா வாசு இறுதிச் சடங்கிற்கு கூட யாரும் போகவில்லை! – சுரேஷ் காமாட்சி வேதனை!

அல்வா வாசு இறுதிச் சடங்கிற்கு கூட யாரும் போகவில்லை! – சுரேஷ் காமாட்சி வேதனை!

700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அல்வா வாசு சமீபத்தில் உடல்நலக் குறைவால் மதுரையில் காலமானார். பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதால் அவருடைய உடல்நிலை மோசமடைந்து காலமானார். இவருடைய இறுதிச்சடங்கில் அவருடன் நடித்தவர்கள் மற்றும் திரையுலகினர் யாரும் கலந்து கொள்ளவில்லை என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் , " சுமார்ர்  36 ஆண்டு காலங்கள் கலை உலகில் பன்முக தோற்றங்களில் நடித்துள்ள அல்வா வாசுவின் இறுதி நாட்கள் எண்ணற்ற துயரங்களைக் கொண்டவையாவே அமைந்துள்ளது. இவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவம் பார்க்க போதிய நிதியில்லாமல் நெருக்கடியில் இருந்தபோது கோடிகளில் புரளும் யாரும் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. ஏன்? இறுதிச் சடங்கிற்கு கூட யாரும் போகவில்லை. காரணம் இவர்களின் அளவுக்கு இறந்தவரிடம் வசதியில்லை. அல்வா வாசுவின் இறுதிநாட்களில் கூட இருந்து தன்னால் இயன்ற உதவிகளை  நடிகரும்…
Read More