மெல்லிசை  மாமணி & மெலடி கிங் வி.குமார்

மெல்லிசை மாமணி & மெலடி கிங் வி.குமார்

கடந்த 1996இல் காலமான இசையமைப்பாளர் வி.குமாரைப் பற்றி இந்த தலைமுறை இளைஞர்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்காது. ஆனால் அவருடைய பாடல்கள் பலவற்றை, பலசமயங்களில் இசை நிகழ்ச்சிகளில் ரசித்திருப்பார்கள். ரசிக்கும்போழுது அந்தப் பாடல்கள் வேறு ஒரு இசையமைப்பாளருடயது என்ற நினைவுடனேயே ரசித்திருப்பார்கள்., இதற்கு நானும் விதி விலக்கல்ல.. பிறகு நான் நினைத்த இசையமைப்பாளரின் இசையில் அமைந்த பாடல் இது இல்லை, இது வேறு ஒருவர் என்று அறியும் போது ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறேன்.பெரும்பாலும் இவ்வாறு நான் MSV , இளையராஜா என்று நினைத்துக் கொண்டிருந்த பல பாடல்களுக்கு இசை அமைத்திருந்தவர் வி. குமார். மெல்லிசை மன்னர்கள் பிரிந்து அவர்களில் எம்.எஸ்.வி. உச்சத்தில் கோலோச்சிய காலத்தில் அறிமுகமான ஏனைய இசையமைப்பாளர்களில் வி.குமார் குறிப்பிடத்தக்கவர். இவரின் மெலடிப்பாடல்கள் எம்.எஸ்.வியின் பாணியிலிருந்து வித்தியாசமாக இருந்தன. உன்னிடம் மயங்குகின்றேன், என்ற ஜேசுதாசின் மகுடத்தில் வைரமாக ஜொலிக்கும் பாடலை உருவாக்கியவர் இவர்தான். ஆனால் வி.குமார் தமிழ்ச் சமூகத்தால் பெரிதும் கொண்டாடப்படாதவர். இவரது பெற்றோர்…
Read More
மெலடி கிங் வித்யாசாகர் பர்த் டே!

மெலடி கிங் வித்யாசாகர் பர்த் டே!

தமிழ் சினிமாவின் தற்போதைய மாஸ் ஹீரோக்களுக்கு அந்த உயரத்தை அடைய அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்ததில் இந்த இசையமைப்பாளருக்கும் பெரிய பங்குண்டு. ஆட்டம் போட வைக்கும் ஓப்பனிங் பாடல், `அட' போட வைக்கும் பின்னணி இசை, தேன் சொட்டும் காதல் பாடல்கள், கண்ணீர் கொட்டும் சென்டிமென்ட் பாடல்கள் என முழுமையான பங்களிப்பை அவர் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆம்.. ரஜினிக்கு சந்திரமுகி ,கமலுக்கு அன்பே சிவம் , அஜித்திற்கு பூவெல்லாம் உன் வாசம் ,விக்ரமுக்கு தூள்,தில் ,மாதவனுக்கு ரன், விஜய்-க்கு கில்லி, தனுஷூக்கு சுள்ளான் என அவர்களின் கேரியரில் பெஸ்ட் என்று சொல்லப்படும் ஆல்பத்தைக் கொடுத்தவர்தான் இசையமைப்பாளர் வித்யாசாகர்! 90'ஸ் கிட்ஸ்களின் ப்ளேலிஸ்ட்டில் கட்டாயம் கால் பங்கு இடத்தை வித்யாசாகரின் பாடல்கள் நிரப்பி யிருக்கும். தங்கள் ஆதர்ச நாயகர்களை, நாயகிகளை வித்யாசாகரின் இசை பின்னணியில் ஒலிக்க, காணப்பெற்றவர்கள் நிச்சயம் பாக்கியவான்களே. ஆனால் `வா வா என் தேவதையே', `ஆராரோ ஆரிரரோ' என 2K கிட்ஸ்களைத்…
Read More
இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன் ஹர்ஷ வர்தன் அறிமுகமாகும் புதிய படம்!

இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன் ஹர்ஷ வர்தன் அறிமுகமாகும் புதிய படம்!

நடிகர் சிபி சத்யராஜ், தனது திரைப்பயணத்தில் தனித்தன்மை மிக்க, சிறந்த உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம், தொடர்ந்து சிறந்த வெற்றிப்படங்களை வழங்கி, வர்த்தக வட்டாரங்களில் மிக நம்பிக்கையான நாயகனாக வலம் வருகிறார். இந்த அம்சங்கள் பொது பார்வையாளர் கள் மற்றும் விமர்சகர்களிடையே திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. அவரது அடுத்தடுத்த திரைப்பட வரிசைகள் மிகவும் நம்பிக்கைக்கு உரியதாக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதோ தற்போது இன்னும் ஆர்வத்தை தூண்டும் வகையில், அவரது புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வந்துள்ளது. இது நடிகர் சிபி சத்யராஜின் 20வது படம். இப்படத்தை Big Print Pictures சார்பில் IB கார்த்திகேயன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் பாண்டியன் ஆதிமூலம் இயக்குகிறார். , இது மொழி எல்லைகளை கடந்து உலகளாவிய ரசிகர்களை ஈர்க்கும் வகையிலான கதைக்கருவுடன் இப்படம் உருவாகிறது. இத்திரைப்படம் முதல் பாதியில் குடும்ப உணர்வுகளை பேசும்படியும், அதைத் தொடர்ந்து இரண்டாவது பாதியில் கதா நாயகனுக்கும்…
Read More
இந்த வருஷம் நான் ரொம்ப பிசி – இசை அமைப்பாளர் சி.சத்யா பேட்டி!

இந்த வருஷம் நான் ரொம்ப பிசி – இசை அமைப்பாளர் சி.சத்யா பேட்டி!

இசையமைப்பாளர் சி.சத்யா இந்த வருடம் ரொம்ப பிசி.அவர் கைவசம் பத்துப் படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். அவருடன் ஓர் உரையாடல்…. நான் இசையமைத்த ‘நாங்க ரொம்ப பிசி’ படம் தீபாவளியன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இயக்குநர் பத்ரியின் ‘ஆடுகிறான் கண்ணன்’ தொலைக்காட்சித் தொடர் மூலம்தான் நான் இசையமைப்பாளரானேன். அதன்பின் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமையவில்லை. ‘நாங்க ரொம்ப பிசி’ படத்தின் மூலம் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சேர்ந்து வேலை செய்தோம். படத்தில் இரண்டு பாடல்கள், ஒன்று கானா பாடல் இன்னொன்று மூட் சாங். இரண்டும் நன்றாக அமைந்திருந்தன. இந்தப் படம் தொடங்கி நாற்பத்தைந்து நாட்களில் படம் வெளியாகிவிட்டது. முதலி லேயே பின்னணி இசைக்கு ஒரு வாரம்தான் நேரம் என்று சொல்லி விட்டார்கள். நகைச் சுவைப் படம் என்பதால் படம் நெடுக பின்னணி இசைக்கு அதிக வாய்ப்பு இருந்தது. அதனால் லைவ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் வைத்து பின்னணி சேர்க்கத் திட்டமிட்டு அதற்கு தயாராக…
Read More
இசைச்சித்தர் என்ற அடைமொழி கொண்ட C.S.ஜெயராமன்!

இசைச்சித்தர் என்ற அடைமொழி கொண்ட C.S.ஜெயராமன்!

”கா….கா….கா….கா..”; ‘காவியமா நெஞ்சில் ஓவியமா’, ‘அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்….’, ‘இன்று போய் நாளை வாராய்…’, ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...’ போன்ற பாடல்களில் அதன் இசையின் மேன்மையையும் பாடல்களில் வெளிப்படும் வளமான கற்பனையையும் மீறி இன்றும் வசீகரிக்க வைக்கும் சி.எஸ்.ஜெயராமனின் குரல். தியாகராஜ பாகவதருக்கு இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி அளித்தவர் சி.எஸ்.ஜெ. ரசிகர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ரத்தக்கண்ணீர்’ வரை பல திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் ‘இசைச் சித்தர்’ சி.எஸ். ஜெயராமன் தான். ஆம் இசைச்சித்தர் என்ற அடைமொழி கொண்ட C.S.ஜெயராமன் …தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான ஒரு இசைக்கலைஞர், இசையமைப்பாளர்… (சில மிகப்பழைய படங்களில் நடித்தும் இருக்கிறார்…) (அவர் தந்தை சிதம்பரம் சுந்தரம் பிள்ளை அவர்களும் கர்நாடக இசையில் புகழ் பெற்றவர்… மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மைத்துனர் CSJ என்பது அவருக்கான இன்னொரு அறிமுகம் … ). 1950-60 களில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில்…
Read More