01
Oct
ருத்ர தாண்டவம் எழுத்து , இயக்கம் - மோகன் ஜி நடிப்பு - ரிச்சர்டு ரிஷி, தர்ஷா குப்தா, ராதாரவி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கதை : தர்மபுரியை சேர்ந்த நல்ல குளத்தை சார்ந்த நல்ல போலீஸ், இளைஞர்களுக்கு போதை பொருளை விற்கும் கும்பலை பிடிக்க முயல்கிறார் அந்த முயற்சியில் ஒருவன் இறந்து விட, இறந்த இளைஞன் தாழ்த்தப்பட்டவன் என்பதால் அவர் மீது நடவடிக்கை பாய்கிறது. அவரது வாழ்க்கை தடம்புரள்கிறது. அந்த வழக்கில் இருந்து எவ்வாறு அவர் வெளிவருகிறார் என்பதே ஒரு தரப்புக்கான நியாயத்தை மட்டுமே முடிவெடுத்து இயங்கும் மோகன் ஜி மூன்றாவதாக இயக்கியுள்ள படம். எளிய மக்கள் மீது நடக்கும் வன்கொடுமையை தடுக்க உருவான வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது, அச்சட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்பன இப்படத்தில் பேசுகிறார். வரலாறும் தெரியவில்லை, புவியலும் தெரியவில்லை. ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம், மதங்களை காப்பற்ற…