கவினின் திருமண தேதி அறிவிப்பு ! இவர்தான் மணப்பெண்ணா !

கவினின் திருமண தேதி அறிவிப்பு ! இவர்தான் மணப்பெண்ணா !

  திருச்சியில் இருந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்த ஒரு பிரபலம்.2011ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்க தொடங்கிய இவர் அடுத்து தாயுமானவன், சரவணன் மீனாட்சி என சீரியல்களில் நடித்து வந்தார். அதேபோல் பீட்சா மற்றும் இன்று நேற்று நாளை திரைப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார். பின் பிக்பாஸில் கலந்துகொண்ட பெரிய ரீச் பெற்ற கவின் லிப்ட், டாடா போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகராக வலம் வந்தார். அடுத்தடுத்தும் இரண்டு படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். பிக்பாஸில் லாஸ்லியாவை காதலித்த கவின் வெளியே வந்தபிறகு காதலை தொடர்வாரா என்றெல்லாம் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் நீ யாரோ நான் யாரோ என்றிருக்கிறார்கள். தற்போது கவின் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணை மணக்க அவர் சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். திருமணம் விரைவில் அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி நடக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
Read More
கூகுள் குட்டப்பா திரைவிமர்சனம்

கூகுள் குட்டப்பா திரைவிமர்சனம்

  இயக்கம்: சபரி, சரவணன் இசை: ஜிப்ரான் நடிகர்கள்: கே எஸ் ரவிக்குமார், தர்ஷன், லோஸ்லியா, யோகிபாபு, பூவையார் கூகுள் குட்டப்பா வயதான தன் தந்தையை பார்த்துகொள்ள ரோபோவை பணியமர்த்தும் மகன், ரோபோவை மகனாக பாவிக்கும் தந்தை இவர்களுக்கிடையே நிகழும் சம்பவங்கள் தான் கதை. மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் இந்த கூகுள் குட்டப்பா. மலையாளத்தில் ஏற்படுத்திய பாதிப்பை தமிழ் பதிப்பு ஏற்படுத்தவில்லை. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோடியாக நடித்துள்ள தர்ஷன் மற்றும் லோஸ்லியா உடைய நடிப்பு ஈர்க்கும் படியில்லை. அவர்களுக்கிடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளும் சரி, உரையாடல் காட்சிகளும் சரி பாதிப்பை ஏற்படுத்தாமல் காட்சியை தொய்வுபடுத்துகிறது. படத்திற்கு ஆறுதலான இரு விஷயங்களில் ஒன்று கே எஸ் ரவிகுமார் நடிப்பு. தான் ஏற்ற கதாபாத்திரத்திற்கான நடிப்பை கொடுக்க, தனது முழு பங்கையும் அளித்துள்ளார். மற்றொன்று இசை, படத்தில் இரு பாடல்கள் கேட்கும் படி உள்ளது. மற்றபடி…
Read More
இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை – கே. எஸ். ரவிக்குமார்

இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை – கே. எஸ். ரவிக்குமார்

ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ரோபோ ஒன்றும் நடித்திருக்கிறது. ஆர்வி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு இன்று பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் விக்ரமன், ஆர்கே செல்வமணி ,ஆர் வி உதயகுமார், பேரரசு, கௌரவ் நாராயணன், பொன் குமரன், கல்யாண், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் டி சிவா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர்கள் விக்ரமன், ஆர்கே செல்வமணி, ஆர் வி. உதயகுமார் பேரரசு ஆகியோர் வெளியிட,…
Read More