08
Dec
பா.ரஞ்சித்தின் 'மெட்ராஸ்' எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு முத்தையாவின் படங்களும் முக்கியமானவை. 'கொடி வீரன்' அதற்கு விதிவிலக்கல்ல. மைக்ரோ செகண்ட் கூட / ஒரு ப்ரேமில் கூட சைவ / வைணவ / சாக்த கடவுள்கள் எட்டிப்பார்க்கவில்லை. அது போலவே பூணல் அணிந்தவர்களும். மண் சார்ந்த தெய்வங்களை, வழிபாடுகளை, சடங்குகளை இப்படத்தில் முத்தையா ஆவணப்படுத்தி இருக்கிறார். முதல் படத்திலிருந்தே பெண் கதாபாத்திரங்களுக்கு முத்தையா அழுத்தம் கொடுத்து வருகிறார். பெரும் ஆய்வுக் கட்டுரைக்கான புதையலின் வழியை எல்லா படங்களிலும் தூவி வருகிறார். அந்த வகையில் இப்படத்தில் 3 பெண்கள். மூவருமே அண்ணன் பாசமும், காதல் நேசமும் ஒருங்கே கொண்டவர்கள். என்றாலும் ஒருவருக்கொருவர் வேறுபடும் புள்ளிகள் தெளிவாக பதிவாகி உள்ளன. 1950, 60, 70களின் தென் தமிழக கிராமங்களை பாரதிராஜா டாக்குமெண்ட் + ரொமான்டிஸைஸ் செய்தார் என்றால் - 1980, 90, 2000ம் வருடங்களின் தென் மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை முத்தையா 'ரா' ஆக பதிவு செய்து…