மூன்றாவது ஆண்டை நிறைவு செய்த கேஜிஎஃப் சேப்டர் 2 !!

மூன்றாவது ஆண்டை நிறைவு செய்த கேஜிஎஃப் சேப்டர் 2 !!

  இன்று கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு நாள். இந்த திரைப்படம் வெளியான போது, மிகப்பெரிய சாதனை புரிந்தது மட்டுமல்லாமல், இந்திய ஆக்‌ஷன் சினிமாவின் வரலாற்றைவே மாற்றியது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடித்த ராக்கி பாய் கதாபாத்திரம் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்க, மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்தார். மிக அழுத்தமான கதையுடன், உலகத் தரமான ஆக்‌ஷன் காட்சிகள், கண்ணுக்கு விருந்து படைக்கும் காட்சி அமைப்புகள் என — கேஜிஎஃப் சேப்டர் 2 இந்திய சினிமாவில் ஒரு கலாச்சார வெற்றியாக மாறியது. ரவி பஸ்ரூர் இசையமைத்த பின்னணி இசை மற்றும் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்து வருகின்றன. சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்த இந்த படம், மொழிகளை கடந்து இந்தியா முழுவதும்…
Read More
கேஜிஎஃப் 2 திரை விமர்சனம்

கேஜிஎஃப் 2 திரை விமர்சனம்

இயக்கம் - பிரசாந்த் நீல் நடிகர்கள் - யாஷ், ஶ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், இந்தியாவின் கோலார் வயல் சுரங்கத்தின் பின்ணனியில் இதுவரை இந்தியா பார்த்திராத மாஸ் ஹீரோ படத்தைதந்திருக்கிறார் பிரசாந்த் நீல் கேஜிஎஃப் முதல் பாகத்தில் வில்லன் கருடனை கொன்று கேஜிஎஃப்பை  கைப்பற்றிய ராக்கி அதன் பிறகுகேஜிஎஃப்பை எப்டி கொண்டு சென்றான் ,  அதை கைப்பற்ற நினைத்த மற்ற நபர்களுக்கும் மற்றும் ராக்கியின்செயல்பாட்டால் அரசாங்கம் என்ன செய்தது  அவர்களை ஜெயித்தானா என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தின் முதல் பாகத்தை இந்தியாவே கொண்டாடியது காரணம் இதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டுமேபார்த்த மேக்கிங் இதில் வசப்பட்டிருந்தது அதில் ஒரு ஹீரோவுக்கான மாஸ் அழகாக பொருந்தியிருந்தது. மீண்டும் இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் படத்தில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அசாத்தியம் அதைசாத்தியபடுத்தி அசரவைத்திருக்கின்றனர். ஒரு மாஸ் ஹீரோ படம் எப்படி இருக்க வேண்டும், அதை எப்படி ரசிகனுக்கு தர வேண்டும், செண்டிமெண்டைகதையில் கலக்க வேண்டும் என…
Read More