29
Sep
இயக்கம் - பி.வாசு நடிகர்கள் - ராகவாலாரன்ஸ் , கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா இசை - கீரவாணி தயாரிப்பு - லைகா நிருவனம் பணக்கார குடும்பம் தொடர்ந்து பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அந்த குடும்பத்தின் பிரச்சனை தீருவதற்கு குல தெய்வ வழிபாடு ஒன்றே தீர்வு என சாமியார் ஒருவர் கூறுகிறார். இதனால் அந்த குடும்பம் அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறது. இவர்களுடன் குடும்பத்திற்கு சம்மந்தம் இல்லாத பாண்டியனும் (ராகவா லாரன்ஸ்) உடன் வருகிறார். அவர்கள் அனைவரும் அந்த ஊரில் உள்ள வேட்டையாபுரம் அரண்மனையில் தங்குகின்றனர். அங்கு அவர்கள் செய்யும் சில விஷயங்களால் எதிர்பாராத அமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெறுகிறது, இதன் பின் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை! பொதுவாக பேய் படங்களை பொறுத்துவரை, தனது சொந்த வாழ்க்கையில் பிரச்சினைக்கு உள்ளாகி, இறக்கும் நபர்களே பழிவாங்குவதற்காக பேயாக மாறுவார்கள். ஆனால், சந்திரமுகி படம் இதில் இருந்து வேறுபடுகிறது எந்தவொரு தொடர்பும்…