‘கல்கி 2898 கிபி ‘ ஷோகாட்சு ஜப்பான் நாட்டில் வெளியிடப்பட உள்ளது !

‘கல்கி 2898 கிபி ‘ ஷோகாட்சு ஜப்பான் நாட்டில் வெளியிடப்பட உள்ளது !

இந்தியாவின் சயின்ஸ் ஃபிக்சன் பிளாக் பஸ்டர் ஹிட்டான 'கல்கி 2898 கிபி ' எனும் திரைப்படம் - ஷோகாட்சு கொண்டாட்டத்தின் போது ஜப்பான் நாட்டில் 2025 ஜனவரி மூன்றாம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது பிரபாஸின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சயின்ஸ் ஃபிக்சன் ப்ளாக் பஸ்டர் ஹிட் படமான 'கல்கி 2898 கிபி' எனும் திரைப்படம்- ஷோகாட்சுக்கான நேரத்தில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதியன்று இந்த பிரபஞ்சத்தின் ஆரவாரத்துடன் ஜப்பானில் வெளியாகிறது. இந்த புத்தாண்டு வெளியீட்டை.. பிரபல தொழிலதிபர் கபாடா கெய்சோவின் ' ட்வின்' எனும் நிறுவன மூலம் வெளியிடப்படுகிறது. இது 'கல்கி 2898 கிபி' படத்தின் உலகளாவிய பயணத்தின் மற்றொரு அத்தியாயத்தை குறிக்கிறது. வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில் வெளியான 'கல்கி 2898 கிபி' எனும் திரைப்படம் உலக அளவில் வசூலில் நட்சத்திர அந்தஸ்தை எட்டியது. இந்தத் திரைப்படம் உலக அளவில் 1,200 கோடிக்கு மேல்…
Read More

முதல் பான் இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸின் பிறந்த நாளில் அவரது சாதனைகள்!

  முதல் பான் இந்திய சூப்பர்ஸ்டாரான பிரபாஸ், அவருடைய தொழில் சார் வாழ்க்கையில் புதிய உச்சத்தில் இருக்கிறார். இதனால் அவரது பிறந்த நாளை நடிகராக மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை மாற்றி அமைத்த நட்சத்திரமாகவும் கொண்டாடுகிறார்கள். முதல் பான் இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸின் நடிப்பில் வெளியான 'பாகுபலி', 'சலார்', 'கல்கி 2898 கிபி' போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனை படைத்து இந்திய சினிமாவில் மறுக்க இயலாத சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். பார்வையாளர்கள் மீது அவர் வைத்திருக்கும் தீராத விசுவாசம் பிளாக்பஸ்டர் ஹிட்டிற்கு பிறகும் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. இதனால் தயாரிப்பாளர்கள் அவருடைய திரைப்படங்களில் பிரம்மாண்டமான முறையில் முதலீடு செய்வது எளிதாகிறது. பெரிய திரையில் பிரபாஸ் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும்.. அதற்கான தோற்றமும்.. அவருடைய நடிப்பும் ...ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களின் அபரிமிதமான அன்பையும், பாராட்டையும் பெறுகிறது. இது அவரது கவர்ச்சிக்கும்,…
Read More
வசூலில் சாதனை ‘கல்கி 2898 கிபி’ !- இத்தனை கோடியா!?

வசூலில் சாதனை ‘கல்கி 2898 கிபி’ !- இத்தனை கோடியா!?

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான திரைப்படம் 'கல்கி 2898 கிபி'. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாள் முதல் காட்சியிலேயே இத்திரைப்படம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. இதனால் இந்திய திரையுலகில் இதுவரை எந்த திரைப்படங்களும் நிகழ்த்தாத வகையில் இப்படம் வெளியான முதல் நாளே 191.5 கோடி ரூபாய் மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இரண்டாவது நாள் முடிவில் 298.5 கோடி வசூலித்து தொடர் சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம்.. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. வியக்க வைக்கும் வி எஃப் எக்ஸ் காட்சிகள்-…
Read More
”கல்கி 2898 கிபி” யுடன் இணைந்துள்ள “இந்தியன் 2” ! -கமலின் இரண்டு முகங்கள் ஒரே திரையில்!

”கல்கி 2898 கிபி” யுடன் இணைந்துள்ள “இந்தியன் 2” ! -கமலின் இரண்டு முகங்கள் ஒரே திரையில்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளைத் துவங்கியுள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், இந்தியா முழுக்க, இதுவரை இல்லாத வகையில், படத்தின் விளம்பர புரமோசன் பணிகளைச் செய்து வருகிறது. முன்னதாக படக்குழுவினர் மும்பையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை கோலாகலமாக நடத்திய நிலையில், இன்று வெளியாகியுள்ள "கல்கி 2898 கிபி" படத்துடன் "இந்தியன் 2" படத்தின் டிரெய்லரை வெளியிட்டு அசத்தியுள்ளது. இன்று அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிப்பில் திரையரங்குகளில், வெளியாகியுள்ள கல்கி 2898 கிபி படத்துடன், “இந்தியன் 2” படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் இந்தியத் திரையுலகில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை…
Read More
“என் திரை வாழ்க்கையில் இதுவே சிறந்த கதாபாத்திரம்!- “கல்கி 2898 கிபி” பட நாயகர் பிரபாஸ்!

“என் திரை வாழ்க்கையில் இதுவே சிறந்த கதாபாத்திரம்!- “கல்கி 2898 கிபி” பட நாயகர் பிரபாஸ்!

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் “கல்கி 2898 கிபி” படத்தின் பேச்சாகவே இருக்கிறது. மாய உலகைகாட்டும் இந்த மகத்தான படைப்பின் வெளியீட்டை நோக்கி ரசிகர்கள், பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் இப்படத்திற்காக, மிகவும் தனித்துவமான விளம்பர உத்திகளை பயன்படுத்தி வருவது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. படத்தின் டிரெய்லரைத் தொடர்ந்து , தயாரிப்பாளர்கள் இப்போது கல்கி 2898 கிபி படத்தின் க்ரோனிகல்ஸ் என்ற நேர்காணல் தொடரை வெளியிட்டுள்ளனர். இந்தத் தொடரில் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்கா தத் ஆகியோருடன் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் நட்சத்திரங்களும் பங்கேற்றுள்ளனர். வீடியோவில் நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் தாங்கள் பணியாற்றிய சுவாரஸ்ய அனுபவங்களைப் பற்றியும், இப்படத்தினைப் பற்றியும் பல விசயங்களை பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவில், மெகாஸ்டார் அமிதாப் பச்சன், “பிரபாஸ் மற்றும் பிரபாஸின் அனைத்து ரசிகர்களும், தயவு செய்து என்னை மன்னிக்கவும், இந்தப்படத்தினை பற்றி தெரியவந்த போது, தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும்…
Read More
‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 AD' திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ! இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் அறிவியல் புனைவு கதையான 'கல்கி 2898 AD' எனும் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் ஆகியோருடன் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் மற்றும் திஷா படானியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் தருணத்தில், இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் அவர்களுடைய அதிகாரப்பூர்வமான எக்ஸ் ( ட்விட்டர்) தளத்தில் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது.. ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்திருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான…
Read More