”கல்கி 2898 கிபி” யுடன் இணைந்துள்ள “இந்தியன் 2” ! -கமலின் இரண்டு முகங்கள் ஒரே திரையில்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளைத் துவங்கியுள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், இந்தியா முழுக்க, இதுவரை இல்லாத வகையில், படத்தின் விளம்பர புரமோசன் பணிகளைச் செய்து வருகிறது. முன்னதாக படக்குழுவினர் மும்பையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை கோலாகலமாக நடத்திய நிலையில், இன்று வெளியாகியுள்ள “கல்கி 2898 கிபி” படத்துடன் “இந்தியன் 2” படத்தின் டிரெய்லரை வெளியிட்டு அசத்தியுள்ளது.

இன்று அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிப்பில் திரையரங்குகளில், வெளியாகியுள்ள கல்கி 2898 கிபி படத்துடன், “இந்தியன் 2” படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டில் இந்தியத் திரையுலகில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய திரைப்படங்களில் ஒன்றான “கல்கி 2898 கிபி” படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், அப்படத்துடன் “இந்தியன் 2” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் டிரெய்லரைப் பார்த்த ரசிகர்கள், உற்சாக வரவேற்பு அளித்து, கொண்டாடி வருகின்றனர்.

Kalki 2898 AD and Indian 2 releasing in a short gap? | Latest Telugu cinema news | Movie reviews | OTT Updates, OTT

மிகப்பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்தியப் புராணக்கதையின் அடிப்படையில், டிஸ்டோபியன் எதிர்காலத்தில் நடக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக, உருவாகியிருக்கும் “கல்கி 2898 கிபி” திரைப்படம், இன்று உலகமெங்கும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. திரைப்படம் காணச்சென்ற ரசிகர்களுக்கு, ஒரு இன்ப அதிர்ச்சியாக “இந்தியன் 2” டிரெய்லர் அமைந்துள்ளது. “கல்கி 2898 கிபி” திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் , மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில், இந்தியன் 2 டிரெய்லரும் அந்தந்த மொழிகளில் வெளியாகியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

பிரம்மாண்டம் எனும் சொல்லுக்கு புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் வகையில், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தியன் 2 படத்தினை,  மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர். இப்படம் உலகமெங்கும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.