12
Jul
இந்தியன் படத்தின் மிகப்பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கும் இரண்டாம் பாகம் எப்படி இருக்கிறது ? இந்தியன் படத்தை மிஞ்சுவது என்பது இயலாத காரியம் அதனால் இயக்குநர் அதை மறந்து வேறு அனுபவம் தர முயன்றிருக்கிறார்.என்னிடம் இன்னும் சரக்கு தீரவில்லை என ஷங்கர் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். இந்தப்படம் இரண்டு விதமான விமர்சனங்களைக் குவிக்கும் ஒன்று சூப்பர் இன்னொன்று படு மொக்கை. இந்த இரண்டிற்கும் காரணம் படத்தில் இருக்கிறது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த கமர்ஷியல் டைரக்டராக திரும்பி பார்க்க வைத்தவர் ஷங்கர். அதுக்கு முக்கிய காரணம் இந்தியன் படம் தான் அதன் இரண்டாம் பாகம் எனும்போது, அதில் எத்தனை விமர்சனங்கள் வருமென்று தெரிந்தே தான் முயற்சித்திருக்கிறார். அவர் சொல்லும் கருத்துக்களில் எல்லாம் எவ்வளவோ விமர்சனங்கள் இருக்கிறது ஆனால் அதைத்தாண்டி அவர் ஒரு அசத்தலான கமர்ஷியல் டைரக்டர். கிட்டதட்ட மாடர்ன் மெகா கமர்ஷியல் படங்களின் ப்ளூ பிரிண்ட் அவர் உருவாக்கியது தான், சமீபத்து…