காவிய காதலைச் சொல்லும் ‘சீதா ராமம்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

காவிய காதலைச் சொல்லும் ‘சீதா ராமம்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

  நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சீதா ராமம்' எனும் காதலை மையப்படுத்திய திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது- இதனை நடிகர் கார்த்தி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். சீதா ராமம் திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. வைஜயந்தி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்கும் ‘சீதா ராமம்’ படத்தை ஸ்வப்னா சினிமா எனும் பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை லைகா நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. 'சீதா ராமம்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் துல்கர் சல்மான், நாயகி மிருணாள் தாகூர், நடிகர் சுமந்த் ஆகியோர்…
Read More
F I R திரை விமர்சனம் !

F I R திரை விமர்சனம் !

இயக்கம் - மனு ஆனந்த் இசை - அஷ்வத் நடிகர்கள் - விஷ்ணு விஷால், கௌதம் வாசுதேவ் மேனன், ரைசா வில்சன் ஒரு முஸ்லீம் பெயர் இருப்பாதாலேயே ஒருவன் வாழ்வில் என்னென்ன சிக்கல்களை அனுபவிக்க வேண்டி வரும். நம் நாடு இன்றைய காலகட்டத்தில் சந்தித்து வரும் முக்கியமான பிரச்சனை இது தான் இந்த திரைப்படத்தின் மையம். சென்னையில் கெமிக்கல் இன்ஞ்சினியரிங் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞன் இர்ஃபான். அன்பான அம்மா அழகான வாழ்க்கை என எளிமையாக வாழ்ந்து வருகிறார். அவர் பார்ட் டைமாக வேலை செய்ய போகும் இடத்தில் நம் அரசாங்கம் கண்காணிக்கும் தீவிரவாதியை சந்திக்கிறார். நேஷனல் அதிகாரிகள் இர்ஃபானை பிந்தொடர அவர் போன இடத்தில் பாம் வெடிக்க பழி அவர் மேல் விழுகிறது. தன் முஸ்லீம் பெயரால் பழிக்கு ஆளாகியுள்ள நாயகன் அதிலிருந்து வெளிவருகிறாரா என்பது தான் படம். சிறுபான்மையினரான முஸ்லீம் நண்பர்கள் மீது இந்தியாவில் தற்போது நடந்து வரும்…
Read More
நாகரீக மனிதனை பின்னுக்கு இழுக்கு சினிமா ருத்ர தாண்டவம்

நாகரீக மனிதனை பின்னுக்கு இழுக்கு சினிமா ருத்ர தாண்டவம்

ருத்ர தாண்டவம் எழுத்து , இயக்கம் - மோகன் ஜி நடிப்பு - ரிச்சர்டு ரிஷி, தர்ஷா குப்தா, ராதாரவி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கதை : தர்மபுரியை சேர்ந்த நல்ல குளத்தை சார்ந்த நல்ல போலீஸ், இளைஞர்களுக்கு போதை பொருளை விற்கும் கும்பலை பிடிக்க முயல்கிறார் அந்த முயற்சியில் ஒருவன் இறந்து விட, இறந்த இளைஞன் தாழ்த்தப்பட்டவன் என்பதால் அவர் மீது நடவடிக்கை பாய்கிறது. அவரது வாழ்க்கை தடம்புரள்கிறது. அந்த வழக்கில் இருந்து எவ்வாறு அவர் வெளிவருகிறார் என்பதே ஒரு தரப்புக்கான நியாயத்தை மட்டுமே முடிவெடுத்து இயங்கும் மோகன் ஜி மூன்றாவதாக இயக்கியுள்ள படம். எளிய மக்கள் மீது நடக்கும் வன்கொடுமையை தடுக்க உருவான வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது, அச்சட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்பன இப்படத்தில் பேசுகிறார். வரலாறும் தெரியவில்லை, புவியலும் தெரியவில்லை. ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம், மதங்களை காப்பற்ற…
Read More
மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி

மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி

  ஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர்  ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில்  இன்று  நடைபெற்றது. இதில் இயக்குனர் மோகன்ஜி, டத்தோ ராதாரவி, நடிகை தர்ஷா குப்தா, இசையமைப்பாளர் ஜுபின், கலை இயக்குனர் ஆனந்த், விளம்பர வடிவமைப்பாளர் பிரவீன், நடிகர் ஜே.எஸ்.கே கோபி, படத்தொகுப்பாளர் தேவராஜ்  உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நடிகர் ‘டத்தோ’ ராதா ரவி பேசுகையில்,'' ‘ருத்ரதாண்டவம்’ யார் மனதையும் காயப்படுத்தாத, அனைவருக்குமான படம்.…
Read More