அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது “பசும்பொன் தேவர் வரலாறு”

அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது “பசும்பொன் தேவர் வரலாறு”

பத்திரிகையாளர் MP ஆபிரகாம் லிங்கன் இயக்கி பிக் பிரிண்ட் கார்த்தி தயாரித்த தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படமான "பசும்பொன் தேவர் வரலாறு" டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா நாளை வெளியிடுகிறார். இது குறித்து பிக் பிரிண்ட் கார்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ நேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்கு பாடுபட்ட தென்னாட்டு நேதாஜி தேசிய தலைவர் பசும்பொன் சிங்கம் அய்யா முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று ஆவண படத்தை "பசும்பொன் தேவர் வரலாறு" என்ற பெயரில் கடந்த 2008ம் ஆண்டு திரையரங்குகள் மூலம் வெளியிட்டோம். அதுவரை அவர் தொடர்பான எந்த ஒரு படைப்பும் வரவில்லை. எங்களின் "பசும்பொன் தேவர் வரலாறு" ஆவண படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதோடு, உலக அளவில் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படம் தியேட்டரில் வணிக ரீதியில் வெளியாகி வந்த ஒரே படம் என்ற பெயரையும்…
Read More
தலைப்புக்கேற்ப ஆக்ஷன் படம் – ‘வீரத்தேவன்’

தலைப்புக்கேற்ப ஆக்ஷன் படம் – ‘வீரத்தேவன்’

“ வீரமற்ற விவேகம் கோழைத்தனம் , விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம் “ என்ற பொன்மொழியை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம்தான் “ வீரத்தேவன் “ இந்த படத்தில் கௌசிக் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். இவர் அகில இந்திய அளவில் கார்த்தே சாம்பியன் விருது பெற்றவர். கராத்தேவில் எல்லா விதமான பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் நாயகனாகும் முதல் படம் இது. நாயகியாக மீனலோஷினி அறிமுகமாகிறார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ப் பெண். அந்த மாவட்ட கதைக்களம்..அதற்கேற்ற தமிழ் பேசத் தெரிந்த நாயகி. அந்த வட்டார பழக்க வழங்கங்களை அறிந்தவர் என்பதால் அவரை நாயகியாக அறிமுகப் படுத்தினோம் என்கிறார் இயக்குனர். மற்றும் கராத்தே கோபாலன், வீரன்செல்வராசு, எம்.ஜி.சிவகுமார், மெய்ராஜன், ஜவஹர் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - வீரன்செல்வராசு படத்தை பற்றி இயக்குனரிடம் கேட்டோம்.. ”நாகரிகம் என்ற நச்சு இன்று நகரத்திலிருந்து நகர்ந்து கிராமப்புறங்களையும்…
Read More