கார்த்தி நடிக்கும் புதிய படம். பூஜை மற்றும் பாடல் பதிவுடன் ஆரம்பம்!

கார்த்தி நடிக்கும் புதிய படம். பூஜை மற்றும் பாடல் பதிவுடன் ஆரம்பம்!

கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி நடித்து வருபவர்,கார்த்தி. தற்போது இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணைகிறார். வித்தியாசமான கதை அமைப்பில் உருவான 'இரும்புத்திரை', 'ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் P.S. மித்ரனுடன் கார்த்தி இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் ‘புரொடக்‌ஷன் 4’ படைப்பாக பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்க, இன்று தீபாவளி நன்னாளில் பூஜையுடன் பாடல் பதிவு ஆரம்பமானது. ஒளிப்பதிவு ஜார்ஜ் C வில்லியம்ஸ், எடிட்டிங் - ரூபன், கலை இயக்கம் - கதிர், நிர்வாக தயாரிப்பு- கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை-பிரசாத், PRO- ஜான்சன். பிரமாண்டமான ஆக்‌ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், படப்பிடிப்பு போன்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
Read More
புதுப்படங்களின் வருகை திரையுலகிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் – பப்ளிக் ஸ்டார் பாராட்டு

புதுப்படங்களின் வருகை திரையுலகிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் – பப்ளிக் ஸ்டார் பாராட்டு

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் சுமார் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்கங்கள் கடந்த 10 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. திரையரங்கங்கள் திறக்கப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே இருந்த சிறு பிரச்சினைகளால் புதிய திரைப்படங்கள் வெளிவராத சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே, பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதால், புதிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் சில வெளியாகின்றன. இதை அடுத்து, தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதற்கு வரவேற்பு தெரிவித்து இருக்கும் நடிகர் பப்ளிக் ஸ்டார், படங்களை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர்களை பாராட்டியிருப்பதோடு, தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். ‘களவாணி 2’ மூலம் வில்லன் வேடத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தினார். பிறகு விஜய் சேதுபதியின் ‘க/ப ரணசிங்கம்’ படத்தில் ஒரு…
Read More
தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதில் இருந்த சிக்கல்கள் தற்காலிகமாக நீங்கியது!

தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதில் இருந்த சிக்கல்கள் தற்காலிகமாக நீங்கியது!

கோலிவுட்டில் அரசல் புரசலாக வெடித்து புதாகரமான விவகாரத்தால் திணறிக் கொண்டிருந்த   தமிழ்த் திரையுலகத்தில் திடீர் திருப்பமாக புதிய தமிழ்த் திரைப்படங்கள் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளன. வி.பி.எஃப். கட்டணம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கும், கியூப் நிறுவனத்திற்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் புதிய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் கியூப் நிறுவனம் அதிரடியாக இந்த நவம்பர் மாதம் வரையிலும் வி.பி.எஃப். கட்டணம் ரத்து என்ற சலுகையை அறிவித்தது. இந்த ரத்து சலுகையை எதிர்பார்க்காத தயாரிப்பாளர் சங்கங்கள் இன்று அவசரமாக கூடி இது பற்றி விவாதித்தன. பின்பு இந்த 2 வார சலுகையைப் பயன்படுத்தி புதிய திரைப்படங்களை வெளியிடுவது என்று ஒருமித்தக் கருத்தினை எடுத்துள்ளன. தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான இயக்குநர் இமயம் பாரதிராஜா இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள்…
Read More
’விபிஎப் கட்டண விவகாரம் : நோ நியூ மூவி ரிலீஸ் – பாரதிராஜா அதிரடி!

’விபிஎப் கட்டண விவகாரம் : நோ நியூ மூவி ரிலீஸ் – பாரதிராஜா அதிரடி!

நாடெங்கும் உள்ள மக்களை முடக்கிப் போட்டுள்ள கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வரும் பத்தாம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 50% இருக்கைகள், பார்வையாளர் களுக்கு முகக்கவசம், ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னும் கிருமிநாசினி கொண்டு திரையரங்கை சுத்தப்படுத்துவது உள்பட ஒரு சில நிபந்தனைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. இப்படி 7 மாதங்களுக்குப் பின்னர் திரையரங்குகள் திறக்கப்படுவதால் இதுவரை வெளி வராமல் முடங்கிக் கிடக்கும் பல புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் விபிஎப் கட்டணத்தை திரையரங்குகள் செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என நடப்பு இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜ திடீரென அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா இது குறித்து மேலும் கூறியபோது ’விபிஎப் கட்டணங்களை திரையரங்க உரிமையாளர்களே செலுத்த வேண்டுமென்றும் டிஜிட்டல்…
Read More
இது வரை திரைக்கே வராத புத்தம் புதிய திரைப்படம்’ நாங்க ரொம்ப பிஸி’ – உங்கள் சன் டிவியில்!

இது வரை திரைக்கே வராத புத்தம் புதிய திரைப்படம்’ நாங்க ரொம்ப பிஸி’ – உங்கள் சன் டிவியில்!

சுந்தர் .சி யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பத்ரி இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரசன்னா, ஷாம் , அஸ்வின் காக்கு மனு, யோகி பாபு, சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ரித்திகா சென், ஸ்ருதி மராத்தே ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஒளிப்பதிவு- கிச்சா, கலை- பிரேம், எடிட்டிங் -பென்னி, நடனம் - சந்தோஷ், சண்டைக்காட்சிகள்- பிரதீப் தினேஷ் .டீமானிடைசேஷன் எனப்படும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது. இக்கதையில் நகைச்சுவை மேலோங்கியிருந்தாலும் ரொமான்ஸ், ஆக்ஷன் போன்றவையும் கலந்திருக்கும். கொரோனா காலத்தில் திரையுலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கும் சூழலில் அரசின் பாதுகாப்பு வழி முறைகளோடு தொடங்கப்பட்ட முதல் படம் இதுதான். அது மட்டுமல்ல  செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கப்பட்டு 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு கொரோனா காலத்திலேயே முடிக்கப்பட்ட படமும் இதுதான். முழுக்க முழுக்க சென்னையில் பல்வேறு இடங்களில் படமாகி உள்ளது. படம் பற்றி இயக்குநர் பத்ரி பேசும் போது,"கொரோனா காலத்தில் குறிப்பிட்ட முப்பதே நாட்களுக்குள்…
Read More
ஒவ்வொரு தீபாவளியும் முக்கியமானதுதான்!-  சுசீந்திரன் நெகிழ்ச்சி

ஒவ்வொரு தீபாவளியும் முக்கியமானதுதான்!- சுசீந்திரன் நெகிழ்ச்சி

பல்வேறு தரப்பினரையும் கவர்ந்த ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சுசீந்திரன். தொடர்ந்து ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ராஜபாட்டை’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘பாண்டிய நாடு’, ‘ஜீவா’, ‘பாயும் புலி’, ‘மாவீரன் கிட்டு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அவருடைய இயக்கத்தில் விரைவில் ரிலீசாக இருக்கும் பத்தாவது படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.தீபாவளி வெளியீடாக வர இருந்த இந்தப்படம் தமிழக அரசின் உள்ளூர் வரிக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்த புதுப்படங்கள் ரிலீஸ் ஆகாது என்ற திடீர் போராட்ட அறிவிப்பாலும், ‘மெர்சல்’ படத்தின் பிரம்மாண்ட ரிலீசாலும் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வருகிற என்கிற தகவல் முன்னமே தெரிந்திருந்தும் ஏன் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை சுசீந்திரன் வெளியிட முடிவு செய்தார் என்றால் ஒவ்வொரு தீபாவளியுமே என்னுடைய வாழ்க்கையில் முக்கியமானதாகத்தான் அமைந்திருக்கிறது என்றார். தீபாவளியையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தவர் அந்த அனுபவத்தை நம்மோடு…
Read More